ஆரோக்கிய உணவு

முடி உதிர்வுக்கு குட்பை… அசத்தல் நெல்லிக்காய்!

நெல்லிக்காய் என்றதும் நம் நினைவுக்குவருவது அதன் சுவையும், கண்ணைக் கவரும் பச்சை நிறமும்தான். ஆனால் சுவையையும் தாண்டி அதில் இருக்கும் சத்துகள் அநேகம். அதனால்தான் ஔவை முதல் சித்தர்கள் வரை அதைக் கொண்டாடினார்கள். நெல்லிக்காயின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் சித்த மருத்துவர் சோ.வித்யா.

ஆப்பிள் பழம் ஒன்றில் உள்ள சத்துகளைவிட நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் சத்துகள் அநேகம். வைட்டமின் சி-யின் இருப்பிடமே நெல்லிக்கனிதான். வேறு எந்தக் காய்கறிகள், சோ.வித்யாபழங்களிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி இதில் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் பி ஆகியவையும் நிறைந்துள்ளன. கால்சியம் 50 மி.கி., பாஸ்பரஸ் 20 மி.கி., இரும்புச்சத்து 1.2 மி.கி என சத்துகளின் களஞ்சியமாக இருக்கிறது நெல்லிக்கனி.

நெல்லிக்காயை உண்பதால்…

* இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி-யால் ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்துவிட முடியும்; எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

* ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும்.

* தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.

* காட்டு நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும்; அழகான சருமத்தையும் பெறமுடியும்.

நெல்லிக்கனி

நெல்லிக்காய் டிப்ஸ்…

* நெல்லிக்காய் தைலம் முடி கொட்டுவதை நிறுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

நெல்லிக்காய் தைலம் செய்முறை:

பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில் தடவிவந்தால், முடி உதிர்வுக்கு ஒரு குட்பை சொல்லலாம்.

நெல்லிக்காய் சாறு

* நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய் சாறு செய்முறை:

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – தேவையான அளவு, இளநீர்-1

செய்முறை: கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.

* `நரை முடி’ இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக ஆகிவிட்டது. உடல்ரீதியாக பிரச்னை எதையும் இது தராது என்றாலும், மனதளவில் சிறு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு ஒரு வழி உண்டு. நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும். .

* உதடு வெடிப்பைப் போக்க, பாலாடையுடன் நெல்லிக்காய் சாற்றைக் கலந்து தடவலாம்.

* நெல்லிக்கனிக்கு இன்னொரு பெயரும் உண்டு… ‘காய கல்பம்’. நம் முன்னோர்களும், சித்தர்களும் தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். நாமும் நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
shutterstock 353677658 14598

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button