மருத்துவ குறிப்பு

அந்த நாட்களில் அதிகரிக்குமா ஆஸ்துமா?

மகளிர் மட்டும்

"மாதவிடாய்க்கும் ஆஸ்துமாவுக்கும் ஏதாவது தொடர்புண்டா டாக்டர்? அந்த நாட்கள்ல ஆஸ்துமா தொந்தரவு கொஞ்சம் அதிகமா தெரியுது…” எனக் கேட்டு வந்த இளம் பெண்களை அடிக்கடி சந்திக்கிறேன். மாதவிடாய் நாட்களில் தொடர்ந்து தலைக்குக் குளிப்பதால் இருக்கும்… என்று அவர்களது அம்மாக்கள் சமாதானப்படுத்துவதையும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். "அப்படியெல்லாம் அல்ல. மாதவிலக்குக்கும் ஆஸ்துமாவுக்கும் நிஜமாகவே தொடர்புண்டு…” என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ஏன்? எப்படிக் கட்டுப்படுத்தலாம்? எல்லாம் விளக்குகிறார்.

"மாதவிலக்குக்கு முன்பும், மாதவிலக்கின் போதும் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு குறையும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களில் சிலருக்கு இந்த ஹார்மோன் மாறுதல்கள் ஆஸ்துமாவின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம். மாதவிலக்கு தவிர, பெண்ணின் உடலில் ஹார்மோன் மாறுதல்களை ஏற்படுத்துகிற வேறு சில விஷயங்களும் ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கலாம். அவை… "கர்ப்பம் கர்ப்ப காலத்திலும் பெண் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிரடியாக நடக்கும் என்பதால் அப்போது பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் வழக்கத்தை விட அதிகமாகும்.
"முறை தவறிய மாதவிலக்கு சுழற்சி 28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருகிறவர்களைவிட, காலம் தவறிய சுழற்சியை சந்திக்கிறவர்களுக்கும் ஆஸ்துமா இருந்தால் அதன் தீவிரம் அதிகமாகலாம்.

"மெனோபாஸ் ஹார்மோன் மாற்றங்களின் உச்சத்தில் இருப்பதால் ஏற்கனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் அதிகமாவதும், சிலருக்கு புதிதாக அந்த பாதிப்பு ஏற்படவும் கூடும். மெனோபாஸுக்கு பிறகு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் இப்படி நிகழலாம். "எப்படிக் கட்டுப்படுத்துவது? மாதவிலக்கு நாட்களில் ஆஸ்துமா தீவிரம் அதிகரிப்பது தெரிந்தால், ஆஸ்துமாவுக்கான சிறப்பு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது நலம். கூடவே உணவு முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும். "வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு அதிகமிருக்கும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வது, வைட்டமின் டி அதிகமுள்ள பால், முட்டை, மீன் சேர்த்துக் கொள்வது, இளம் வெயிலில் நடப்பது போன்றவற்றைச் செய்யலாம்.

"வைட்டமின் சி மற்றும் ஈ அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் நுரையீரல் வீக்கம் மற்றும் அழற்சி குறையும். இவற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸும் பீட்டா கரோட்டினும் ஆஸ்துமாவின் தீவிரத்தைத் தணிக்கும். "ஒயின், உலர் பழங்கள், ஊறுகாய், ஃப்ரோஸன் உணவுகள் போன்றவற்றில் உள்ள சல்ஃபைட், சிலருக்கு ஆஸ்துமாவின் தீவிரத்தைத் தூண்டலாம். அவற்றைத் தவிர்க்க வேண்டும். "எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது ஆஸ்துமா பாதித்தவர்களுக்கான முக்கிய அட்வைஸ். சில கிலோ எடைக் குறைப்புகூட அவர்களுக்கு ஆஸ்துமா தீவிரத்திலிருந்து நிவாரணம் தருகிற வித்தியாசத்தை அனுபவத்தில் உணர முடியும்.ld45785

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button