எடை குறைய

அசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்!!!

அனுஷ்கா, இந்திய துறையுலகின் துணிச்சலான நடிகைகளில் ஒருவர். மற்றவர்களை போல ஐந்தாறு காட்சிகள், நான்கு பாடல்களுக்கு மட்டும் வந்து செல்லும் படங்கள் என இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க கூடியவர்.

"வானம்" படத்தில் விலைமாதுவாக நடித்தார், "தெய்வத்திரு மகள்" படத்தில் பயந்த சுபாவம் கொண்ட வழக்கறிஞர், "அருந்ததி" படத்தில் வீரமான இராணி என இவரது பல கதாப்பாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இப்போது திடீரென உடல் உடையை ஏற்றி குண்டு பெண்ணாகவும், பின் உடல் எடையை குறைத்தும் மற்ற நடிகைகளை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் அனுஷ்கா. இந்த உடல் எடை அதிகரிப்பு, குறைப்புக்கு பின்னணியில் சில ரகசியங்கள் இருக்கின்றன…..

புதிய படத்திற்காக உடல் எடை அதிகரித்த அனுஷ்கா
நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் "இஞ்சி இடுப்பழகி" எனும் படத்திற்காக தான் உடல் எடையை அதிகரித்து இருக்கிறார் அனுஷ்கா. இதற்காக இவர் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.

20 கிலோ எடை அதிகரிப்பு
குண்டு பெண்ணாக உடல் எடையை அதிகரிக்க ஏறத்தாழ 20 கிலோ எடை அதிகரித்து இருக்கிறார் அனுஷ்கா.

புரதச்சத்து உணவுகள்
20 கிலோ உடல் எடை அதிகரிக்க நிறைய உணவு சாப்பிட்டாராம் அனுஷ்கா. முக்கியமாக நிறைய பிரதச்சத்து உணவு உட்கொண்டாராம் அனுஷ்கா.

கதாப்பாத்திரத்திற்காக உழைப்பி
இந்த படத்தில் குண்டான ஓர் பெண், கேலி கிண்டல் மத்தியில், வைராக்கியமாக உடற்பயிற்சிகள் செய்து எப்படி ஒல்லியாக மாறுகிறார் என்பது தான் கதை என கூறுகிறார்கள்.

யோகா ஆசிரியர்
நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே யோகா ஆசிரியாராக இருந்து வந்தவர் அனுஷ்கா. ஆதலால் தான் மற்ற நடிகைகள் போல இன்றி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ஒரே மாதிரியான உடல்வாகினை பராமரித்து வருகிறார்.

தினமும் யோகா
தினமும் யோகா செய்யும் பழக்கம் கொண்டவர் அனுஷ்கா, இது தான் இவரது உடல் மற்றும் மனதினை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறதாம்.

பழைய அனுஷ்கா எப்போது வருவார்?
இவர் குண்டானதை கண்டு பல நாயகிகள் வியப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். மீண்டும் இவர் எப்போது பழைய நிலைக்கு மாறுவார் என்ற யோசனையில் இருக்கிறார்கள். இஞ்சி இடுப்பழகி படப்பிடிப்பு முடியும் போது மீண்டும் பழைய அனுஷ்கா வந்துவிடுவார். படத்தின் இறுதியில் இவர் ஒல்லியாக மாறுவதே கிளைமாக்ஸ்.

"லேடி சியான்"
இஞ்சி இடுப்பழகி போஸ்டர்களில் குண்டு அனுஷ்காவை கண்டு வியப்படைந்த ரசிகர்கள், இவரை "லேடி சியான்" என்று அழைத்து வருகிறார்கள்.

Related posts

உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?, weight loss tips in tamil

nathan

ஆடாமல், அசையாமல் உடல் எடையை குறைக்க உதவும் 7 எளிய வழிகள்!!!

nathan

பெண்களின் உடல் எடை அதிகரிக்க அரிசி உணவு காரணமா?

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: