17 1439791270 7
ஆரோக்கியம் குறிப்புகள்

நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா??

உலகில் அனைத்து உயிரினங்களுக்கும் பிறக்கும் போதே அதன் இறப்பும் நிர்ணயம் செய்யப்பட்டுவிடுகிறது. இது, செடி, கொடிகளில் தொடங்கி, சிங்கம், புலி, மனிதர்கள் வரைக்கும் மாற்றம் ஏதும் இல்லாத ஒன்று. எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவன் ஓர் நாள் இயற்கை மரணமாவது அடைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

20 வருடங்களுக்கு முன்பு வரை புண்ணியம் என்று கருதப்பட்டு வந்த இயற்கை மரணங்கள் நிகழ்ந்து வந்தது. என்ன மாற்றம் நடந்ததோ, இன்று 99% நோய் காரணமாகவும், விபத்து காரணமாகவும் தான் மரணங்கள் நடக்கின்றன. நோய்களுக்கு மட்டும் தான் அறிகுறிகள் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

இயற்கையாக ஒருவர் மரணமடைய போகிறார் என்பதை கூட சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். ஒருசில பொருள்களின் நறுமணத்தை, வாசத்தை, உங்களால் நுகர முடியவில்லை எனில், நீங்கள் அதிக பட்சம் உங்களது கடைசி ஐந்து ஆண்டுகளை வாழ்ந்து வருகிறீர்கள் என அர்த்தம்…..

முதல் எச்சரிக்கை
ஓர் மனிதன் அவனது கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறான் என்பதற்கான முதல் எச்சரிக்கை, அவனது நுகரும் திறன் தான். எப்போது, ஒருவரது நுகரும் திறனில், குறைபாடு ஏற்படுகிறதோ, அவரது உடலில் ஏதோ மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது என்று அர்த்தம்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு
நீண்ட நாட்களாக வயதான 3,000 நபர்களை வைத்து சிகாகோ பல்கலைகழகத்தினர் நடத்திய ஆய்வில். ஐந்து வகையான நறுமணங்களை அல்லது வாசத்தை நுகர முடியாது இருப்பவர்கள் அவர்களது கடைசி நாட்களில் வாழ்ந்து வருவதை கண்டறிந்தனர்.

57 – 85 வயது
சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் 57 – 85 வயது நிரம்பிய முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வாசனைகள்
பொதினா, மீன், ஆரஞ்சு, ரோஸ் மற்றும் லெதர். இந்த ஐந்து பொருள்களின் நறுமணம் அல்லது வாசத்தை நுகர முடியவில்லை எனில், அவர்கள் அவர்களது கடைசி ஐந்து வருடங்களில் வாழ்ந்து வருகிறார்கள் என கண்டறிந்துவிடலாம்.

ஐந்து வருடங்கள்
ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் 3,005 நபர்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்விற்கு பதிலளித்த 430 நபர்கள் மரணமடைந்தனர். இது, சரியாக அவர்கள் பதிலளித்தது போலவே, அந்த ஐந்து பொருள்களின் நறுமணத்தை நுகரும் திறனுக்கு ஏற்பவும் இவர்களது மரணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நுகரும் திறன்
இந்த ஐந்து பொருகளை,
சாதரணமாக நுகர்வது – 10% மரணம்
நுகர்வதில் கோளாறு – 19% மரணம்
நுகரவே முடியவில்லை – 39% மரணம்
இது அவரவர், வயது, பாலினம், போன்றவைக்கு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மரணத்தை குறித்த அறிகுறி அல்ல
இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள், " நுகரும் திறனில் குறைபாடு என்பது மரணத்திற்கான 100% அறிகுறி அல்ல, இது உங்கள் உடலுக்குள் ஏதோ மாற்றம் ஏற்படுவதையும், உடல்நலத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் அறிகுறி தான், இதை வைத்து, நீங்கள் உடனே விழித்துக்கொண்டு, உங்கள் உடல்நலம் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்." என கூறியிருக்கிறார்கள்.17 1439791270 7

Related posts

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி-சாராத செயல்பாடுகள்!!!

nathan

சில எளிய டிப்ஸ்கள் இங்கே.. இந்த இலையை 2 போட்டு வைங்க மாவு கெடாமல் இருக்க.

nathan

நீங்கள் எந்த பக்கம் படுத்துறங்க வேண்டும் தெரியுமா..? அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

எது சரியான முறை? உடல் எடை குறைப்பு

nathan

திருமணப் பொருத்தம் தேவையான ஒன்றா, இல்லையா?

nathan

இளம் வயதினரை திருமணம் செய்யக்கூடிய 4 ராசிகள்

nathan

வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்!

nathan

வாழ்நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தினமும் இதனை சாப்பிடுங்கள்.!!

nathan