தலைமுடி சிகிச்சை

உங்களின் கூந்தலுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் அதிசயமான நன்மைகள்

அடர்த்தியான மற்றும் நீளமான முடியை விரும்பாத பெண்களே இந்த உலகில் இருக்க முடியாது. அத்தகைய அழகிய கூந்தலை பேணிக்காக்க பெண்கள் படும் பாடு இருக்கின்றதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

அவ்வாறு அரும்பாடு பட்டு வளர்த்த கூந்தலுக்கு முடி உதிர்தல், சன்னமான, பொடுகு, உச்சந்தலையில் அரிப்பு போன்ற பல்வேறு கூந்தல் பிரச்சனைகள் ஏற்பட்டால், அத்தகைய பிரச்சனைகள் கட்டாயம் ஒரு கெட்ட கனவாக மட்டுமே இருக்குகம்.

ஆயினும் இத்தகைய பிரச்சனைகள் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் மத்தியில் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசு மற்றும் பிற போன்றவை உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணங்களாக விளங்குகின்றன.

நீங்கள் பல மத விலையுயர்ந்த முடி பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்தினாலும் உங்களுடைய கூந்தல் நீங்கள் விரும்பிய தோற்றதில் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் விரும்பிய கூந்தலை எவ்வாறு பெறுவது? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

இன்று, நாங்கள், நீங்கள் இதற்கு முன் அறிந்திராத உங்களின் கூந்தலுக்கு அதிகப் பயன் தரும் இரண்டு இயற்கைப் பொருட்களைப் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

அந்த அரிய இரண்டு பொருட்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகும். இந்த அதிசயமான கலவையை பயன்படுத்தி மிகவும் பளபளப்பான கூந்தல் இழைகளைப் பெறலாம்.

இந்த அதிசய கலவைய தயார் செய்ய 2 முதல் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் உடன் புதிதாக பிழியப்பட்ட ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். உங்கள் உச்சந்தலையின் மீது இந்த கலவையைப் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது முழு இரவு வரை அதை விட்டு விட வேண்டும்.

மயிர்க்கால்களை வலுப்படுத்துவதுடன் இந்தக் கலவை சேதமடைந்த முடியை சீரமைக்கவும் செய்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த அதிசயமான கலவை பல்வேறு வழிகளில் உங்கள் கூந்தலுக்கு பல்வேறு வகைகளில் செயலாற்றுகின்றது.

என்னென்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

1. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது
இரண்டிலும் உள்ள புரதங்கள் மற்றும் கனிமங்கள் மயிர்க்கால்களைப் பலப்படுத்துவதுடன் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. பல பெண்கள் இந்த இரண்டு நம்பமுடியாத பொருட்களின் திறன் மீது சத்தியம் செய்கின்றார்கள்.

2. பொடுகுகளைப் போக்குகின்றது
எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் பண்புகள், தேங்காய் எண்ணெய்யில் உள்ள சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்டுடன் இணைந்து பொடுகுகளைப் போக்குகின்றது. இந்த இயற்கை பொருட்களின் நட்சத்திர பிணைப்பால் உங்கள் மயிர்க்கால்கள் வலுவடைகின்றன. அதன் காரணமாக உங்களின் பொடுகு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கின்றது.

3. வெள்ளை முடியை தடுக்கின்றது
தேங்காய் எண்ணெய் தலையின் மேற்பரப்பிற்கு கீழ் சென்று மயிர்க்கால்களின் வளர்ச்சியை அதிகம் ஊக்குவிக்கின்றது. தேங்காய் எண்ணெய் உடன் இணைந்து எலுமிச்சை சாற்றில் அதிகம் உள்ள வைட்டமின் சி உங்கள் முடி நரைப்பதை தடுக்கின்றது. இந்த கலவையை பல்வேறு மக்கள் வழுக்கைத் தலை பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகின்றார்கள்.

4. உச்சந்தலை அரிப்பை போக்குகின்றது
புதிய எலுமிச்சை சாறு உடன் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் உச்சந்தலையின் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றது. உச்சந்தலையின் அரிக்கும் பிரச்சனைக்கு இதம் அளிப்பதுடன், இந்த கலவை உச்சந்தலையின் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றது. இதன் காரணமாக உங்களின் உச்சந்தலை உலர்ந்து போவது தடுக்கப்படுகின்றது.

5. சன்னமான முடியை தடுக்கின்றது
மெல்லிய முடிப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு, இந்த கலவை ஒரு அற்புத மருந்து. இந்தக் கலவையை ஒரு வழக்கமான அடிப்படையில் விண்ணப்பிக்கும் பொழுது உங்கள் மயிர்க்கால்கள் வலுவடையும் மற்றும் அது மிகப் பெரிதாகத் தோன்றும்.

6. முடியை மென்மையாக்கும்
இரண்டு பொருட்களின் ஆழமான சீரமைப்பு திறன் உங்களின் முடி அமைப்பை பெரிதும் மேம்படுத்தும். இந்த அற்புதமான சேர்க்கை, உங்களின் முடியை வலுப்படுத்துவதுடன் மென்மையாக மாற்றி பிரகாசிக்கச் செய்யும்.

7. சூரிய வெப்பதில் இருந்து பாதுகாக்கிறது
இந்த இரண்டு பொருட்களில் உள்ள மூலக்கூறுகள் சூரிய கதிர்களால் உங்கள் தலைமுடி பாதிக்காத வண்ணம் பாதுகாக்கின்றது. இந்தக் கதிர்களின் வீச்சிற்கு அதிகமாக உட்பட்டால் உங்கள் கூந்தல் இழைகள் சீர்படுத்த முடியாத பாதிப்பை அடையும். மற்றும் அவைகள் எளிதில் உடையக்கூடியதாக மாறி விடும்.

7miraculousbenefitsofusingcoconutoilwithlemonjuiceforhair5 06 1475715744

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button