முகப் பராமரிப்பு

கருவளையத்தை போக்கும் ஃபேஸ் பேக்குகள்

5bffb5e1 374a 421e 8906 03d95aac8a23 S secvpf
கண்ணைச் சுற்றிலும் பலருக்கு கருவளையம் போன்று இருக்கும். இது, அவர்களின் அழகை குறைத்து விடும். பெண்கள் என்றால், மிகுந்த கவலைப்படுவர். இதற்காக, கவலைப்பட வேண்டியதில்லை. தயிரும், மஞ்சள் தூளும் போதும் என்கின்றனர், இயற்கை மருத்துவத்தை விரும்பும் அழகுக்கலை நிபுணர்கள்.

* தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனத்தை கலந்து பசைபோல் ஆக்கி, தினமும் கண்ணின் கீழ் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால், ஓரிரு மாதங்களில், கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

* கருவளையத்திற்கு உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல, முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி தோல் பளிச்சிடும்.

* கற்றாழை ஜெல்லும் கருவளையத்தை போக்கும். ஜெல்லால், கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக, ‘மசாஜ்’ செய்து விடுங்கள். வட்ட வடிவில், மசாஜ் செய்ய வேண்டும்.

* குளிப்பதற்கு முன், சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால், கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.

* கண்களின் சோர்வு நீங்க, மற்றொரு நல்ல இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

– இப்படி ஆலோசனை தருகின்றனர் நிபுணர்கள். கண்ட கண்ட, ‘கிரீம்’களை வாங்கி காசை கரியாக்குவதை விட, எளிதாக கிடைக்கும் இந்த சிகிச்சை முறைகள் செய்து பயன் பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button