மருத்துவ குறிப்பு

விலங்கொன்றினால் கடியுண்டால் செய்யவேண்டிய முதலுதவி. விலங்கு விசர் நோயும் அதன் கட்டுப்பாடும்

Rhabdo virus ஒருவகை வைரஸ்கிருமியால் இந்த நோய் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நோய்க் காவியாகப் பிரதானமாக நாய், அரிதாகப் பூனை, குரங்கு கீரி, ஓநாய், நரி காணப்படுகிறது.
இந்த நோய்க் கிருமி நரம்புத் தொகுதியைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது.

விலங்குவிசர் நோய்

நோய்த் தொற்றுக்குள்ளான விலங்கினது உமிழ் நீரில் வைரஸ் கிருமிகள் செறிந்து காணப்படும். நோய்த் தொற்றுக்குள்ளான விலங்கு கடிக்கும்போது அல்லது மென்சவ்வுள்ள பிரதேசத்தில் நக்கும்போது அல்லது வேறு வழிகளில் உமிழ்நீர் நேரடியாகத் தொடுகையுறும்போது தொற்றை ஏற்படுத்துகிறது.
நாயில் காணப்படும் நோய் அறிகுறிகள்

கோபமடைந்த நிலையில் காணப்படும்
கண்ணிற்படும் பொருள்களில் கடிக்கும்
நீர் அருந்த முடியாத நிலை
அதிகரித்த உமிழ்நீர்ச்சுரப்பு
அசாதாரணமாக ஊழையிடுதல்
சுயகட்டுப்பாடற்ற செயற்பாடுகள்

மனிதனிற் காணப்படும் நோய் அறிகுறிகள்

அதிக காய்ச்சல் வியர்வை
கண்களை மூடமுடியாத நிலை
அதிகரித்த உமிழ்நீர்வெளியேற்றம்
மூச்சுத் திணறல்
காற்றை எதிர்கொள்ளமுடியாத நிலை
நீரை விழுங்க முடியாத நிலை
தொடர்பாடற்ற செயற்பாடுகள்
கோபமடைதல்
தொண்டைப்பகுதியில் இறுக்கமடைதல்
நரம்புத் தொகுதி செயலிழப்பதால் உறுப்புக்களின் செயற்பாடு பாதிக்கப்பட்டு மரணம் சம்பவிக்கும்.

விலங்கொன்றினால் கடியுண்டால் செய்யவேண்டிய முதலுதவி

காயத்தை நன்றாக 5 நிமிடம் வரை ஒடும் நீரில் கழுவவும்.
பின்சவர்க்காரமிட்டு நீரில் கழுவவும்dog
தொற்று நீக்கியைப் பாவித்துத்துடைக்கவும்
வைத்தியசாலைக்குச் செல்லும்போது கடித்த நாயின் ARM காட்டை எடுத்துச்செல்லவும்.

விலங்குவிசர் நோய்க்கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள்

மனிதருக்கானதடுப்பு மருந்தேற்றல்
முற்கூட்டியே தடுப்புமருந்தேற்றல்
நாய்க் கடியின் பின்னானதடுப்பு மருந்தேற்றல்

வளர்ப்புநாய்களுக்கான தடுப்புமருந்தேற்றல்

நாய்க்குட்டியின் 6 வார வயதில் முதலாவது தடுப்பூசி
நாயின் 6 மாத வயதில் இரண்டாவது தடுப்பூசி
பின்னர் வருடமொருதடவை தவறாது தடுப்பூசி ஏற்றல்

நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாடு

ஆண்நாய்களுக்கான கருத்தடைச் சத்திரசிகிச்சை
பெண்நாய்களுக்கான கருத்தடைச் சத்திர சிகிச்சை
பெண் நாய்களுக்கான 6 மாதத்திற்கொரு தடவை போடப்படும் கர்ப்பத்தடை ஊசி.

Dr.பி.ரி.சாந்தன்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button