மருத்துவ குறிப்பு

சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்
சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.

ஆண்களுக்கு விரைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.

இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன. 201701251439043609 Diabetes bed room problem SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button