33.3 C
Chennai
Saturday, May 18, 2024
ht444872
எடை குறைய

எடை குறைப்பு இப்போ ரொம்ப ஈஸி

லைப்போசக்‌ஷன் மேஜிக்

சீரற்ற உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையாலும் உலகெங்கும் உடல் பருமன் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பருமனான உடல் கொண்ட அனைவரும் தேடியபடி உள்ளனர். இவர்களுக்கு லைப்போசக்‌ஷன்(Liposuction) என்றழைக்கப்படும் கொழுப்பு நீக்க சிகிச்சை பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.உலகமெங்கும் தற்போது பிரபலமாகி வரும் லைப்போசக்‌ஷன் சிகிச்சை உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், நம் உடல் வடிவத்தை செதுக்குவதற்கான சிகிச்சை முறையாகவும் உள்ளது.

இச்சிகிச்சை முறை அபாயகரமானதா?

முற்றிலும் இல்லை. தகுதிவாய்ந்த மருத்துவர்களிடம், அங்கீகாரம் பெற்ற சரியான மருத்துவமனைகளில் செய்துகொண்டால் எந்த பிரச்னையும் வராது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு உள்ளவர்களும் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை மருத்துவரிடம் உறுதிசெய்துகொண்டு லைப்போசக்‌ஷன் செய்து கொள்ளலாம்.இதனால் மரணம் நிகழ்வதாய் வரும் செய்திகள் எல்லாம், நோயாளி தன் உடல் பிரச்னைகளை (இதயக்கோளாறு) மருத்துவரிடம் மறைப்பதாலோ அல்லது சிகிச்சையின் போது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய Anaesthesia related complication காரணமாகவோத்தான் என்றே கூற முடியும்.

யாரெல்லாம் இந்த சிகிச்சை மேற்கொள்ளலாம்?

இச்சிகிச்சை ஆண்கள், பெண்கள் இருபாலரும் செய்துகொள்ளலாம். ஆண்கள் பொதுவாக தொப்பையைக் குறைப்பதற்கும் gynaecomastia எனப்படும் ஆண் மார்பக வளர்ச்சிக்கும் செய்து கொள்கின்றனர். பெண்களுக்கு மார்பகம் குறைப்பது முதல் தொப்பை, தொடை, கைகளின் ஆடு சதை வரை எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

லைப்போசக்‌ஷன் எவ்வாறு வேலை செய்கிறது?

நம் உடலில் உள்ள கொழுப்பு செல்களின் எண்ணிக்கை நிலையானதாகும். உதாரணமாக, லைப்போசக்‌ஷன் மூலம் 1000 இருக்கக்கூடிய இச்செல்களின் எண்ணிக்கையை நாம் 500-ஆக குறைக்கிறோம்.இதனால் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால், இவை விரிவடையக்கூடும். எனவே, லைப்போசக்‌ஷனுக்குப் பிறகும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அந்த கொழுப்பு செல்கள் மீண்டும் விரிவடையக்கூடும்.ht444872

Related posts

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க…

nathan

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​ #GoodHealth

nathan

குறுக்கு வழியில் எடை குறைக்கலாமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் எடை குறைக்கனுமா? இதோ கவர்ச்சி அழகி கிம் கர்தாஷியனின் புரோட்டீன் டயட்!

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

nathan

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க.

nathan

உடல்பருமன் குறைக்க உதவும் குறைந்த கலோரியுள்ள 8 உணவுகள்!

nathan

உடல் எடை… பெண்களே கவனம்…

nathan

எடை குறைய சில சுவையான உணவுகள்

nathan