ஆரோக்கிய உணவு

இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்

ஆட்டுப் பாலில் உள்ள அபரிமிதமான மருத்துவ குணங்கள் மற்றும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்
ஆட்டுப்பாலில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆட்டுப்பால் தாய்ப்பாலுக்கு மிகச்சரியான மாற்று என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் என்ற புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பினை ஒத்ததாக உள்ளது. இதே போல் ஆட்டுப்பாலில் உள்ள ஒலிகோசேர்க்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது. இதனால், பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிகச்சிறந்த மாற்று ஆட்டுப்பால் மட்டுமே.

பச்சிளங்குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற நோய்களை ஆட்டுப்பால் தருவதன் மூலம் தடுக்கலாம். தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தும் உயிர்வேதிப் பொருட்கள் தாய்ப்பாலில் உள்ளன. இதைப்போன்ற நன்மை செய்யும் உயிர்வேதி பொருட்கள் ஆட்டுப்பாலிலும் காணப்படுகின்றன.

மேலும், ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்புகள் மாட்டுப்பாலில் உள்ள கொழுப்பை விட மிருதுவானதாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகி விடும். சிலருக்கு பசுவின் பால், தயிர், மோர் போன்ற பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது போன்ற ஒவ்வாமை இருப்பவர்களுக்கு ஆட்டுப்பால் மாற்றாக இருக்கிறது. ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் யாவரும் ஆட்டுப்பாலை தாராளமாக உட்கொள்ளலாம். ஆட்டுப்பால் எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்துவதில்லை.

ஆட்டுப்பாலில் இரும்புச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு போதிய இரும்புச்சத்து கிடைத்து விடுகிறது. ஆட்டுப்பாலுக்கு வயிற்று புண்ணை ஆற்றும் சக்தி உண்டு. ஆட்டுப்பால் அருந்தும் குழந்தைகள் நன்றாக தூங்குவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும், ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலை விட அதிக அளவு செலினியம் சத்து காணப்படுகிறது.

இந்த செலினியம் உப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கின்றன. ஆட்டுப் பாலில் உள்ள ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. சீரான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றன. ஆட்டுப்பால் அருந்துவதால் அனைவருக்கும் பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்று ஆரோக்கியத்தை பெறலாம். 201701261150098481 Protecting the heart of goat milk SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button