சரும பராமரிப்பு

நிமிடத்தில் முகம் ஜொலிக்க வேண்டுமா? இந்த ட்ரிக்கை உபயோகிங்க!

அலுவலகம், கல்லூரி என பெண்களுக்கு எல்லா நேரமும் பிஸியாகத்தான் இருக்கும். எங்கு அழகு படுத்திக் கொண்டிருப்பது என கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.

அதன் விளைவில் முகத்தில் அழுக்கு, இறந்த செல்கள் சேர்ந்த்ய் பல சரும பிரச்சனைகளை தந்து விடும். அழகு நிலையத்திற்கு சென்றாலும் அவை முழுபயன் தராது.

காரணம் எல்லா அழகு சாதங்களும் ஹெர்பல் என்று சொன்னாலும் அவை அலர்ஜியை உண்டாக்கி விடும். நிறைய பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

நிமிடத்தில் சமையல் செய்து கொண்டே அல்லது பல வேலைகள் செய்து கொண்டே மிக விரைவாக செய்து முடிக்கும் அழகு குறிப்புகள் நிறைய உள்ளன.

எந்த பக்கவிளைவும் இல்லாமல் நேரத்தையும் விழுங்காமல் உங்கள் முகத்தை மேஜிக் செய்யும் இந்த குறிப்புகளை பார்க்கலாமா?

பால் : காலையில் முதல் வேலையாக காய்ச்சாத பாலில் சிறிது பஞ்சை நனைத்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். இதை விட மிகச் சிறந்த கிளென்சர் இல்லை. அழுக்குகளை ஆழமாக நீக்கி விடும். முகத்தை பளிச்சிட வைக்கும்.

முகத்திற்கு பயிற்சி : குப்புற படுத்தபடி, மெதுவாக கையை ஊன்றி, இரண்டு கால்களையும் அகலப்படுத்து எழுந்திருங்கள். தலையை மட்டும் தொங்க விட்டவாறு எழுந்தரிக்க வேண்டும். இந்த பயிற்சியால் அதிக ரத்தம் முகத்திற்கு பாயும். தசைகள் இறுகி, சுருக்கங்கள் மறைந்துவிடும்.

ஐஸ் துண்டு : எப்போது நேரமிருக்கிறதோ அப்போது ஒரு ஐஸ் துண்டை எடுத்து முகத்தில் தேயுங்கள். இதனால் அடைப்பட்ட துளைகள் மூடும். தளர்ந்த சருமம் இருகி, முதுமையான தோற்றத்தை இள்மையாக்கும்.

ஆவி பிடித்தல் : நீரில் க்ரீன் டீத்தூளை போட்டு கொதிக்க வைத்து அதில் மஞ்சள் பொடி போட்டு ஆவி பிடியுங்கள். இவை முகப்பருக்களை தூர வைக்கும்.

ரோஸ் வாட்டர் : அலுவலகம் கல்லூரியிலிருந்து களைத்து போய் வருகிறீர்கள். உடனே ஏதாவது விசேஷத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் முகம் சோர்வாக இருக்கிறதே என தோன்றுகிறதா? கவலை வேண்டாம். ரோஸ் வாட்டரை பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவுங்கள். இழந்த புத்துணர்ச்சியை முகம் மீண்டும் பெறும்.

தக்காளி மசாஜ் : மிக எளிதானது. உங்கள் முகம் என்ணெய், முகப்பருக்களான் ஆனது என்றால் தக்காளி சிறந்த பொருள். தக்காளியை பாதியாக வெட்டி ஒரு பாதியில் முகத்தையும் கழுத்தையும் தேயுங்கள். 1 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் ஜொலிப்பதை நீங்களே உணர்வீர்கள்.

faceh 07 1475831746

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button