சூப் வகைகள்

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த சூப்பை அருந்தலாம். இப்போது மிளகு சீரக சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – 100 கிராம்,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
பிரியாணி இலை – 2,
வெங்காயம் – 2,
கேரட் – 2,
சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

* குக்காரை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், மிளகு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், கேரட்டை போட்டு நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

* விசில் போனவுடன் மூடியை திறந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

* சத்தான மிளகு சீரக சூப் ரெடி.

குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.201701271033467668 jeera pepper soup jeera pepper soup SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button