ஆரோக்கியம் குறிப்புகள்

வெந்நீர் Vs ஜில் நீர்… எந்த குளியல் பெஸ்ட்?

‘வெந்நீர் குளியல்தான் சரி… உடலுக்கு நல்லது நோய்கள் நெருங்காது’ இப்படி ஒரு குரூப்… ‘குளிர்ந்த நீரில் குளிப்பதுதான் சருமத்துக்கு நல்லது. சுறுசுறுப்பு அதிகரிக்கும்’ இப்படி ஒரு குரூப்… இந்த இரண்டில் எது சரி என்று கேட்டால் இரண்டுமே சரிதான் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த சீதோஷ்ண நிலைக்கும் அவரவர் உடல்நிலைக்கும் ஏற்ப குளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவே, எந்தக் குளியலில் என்னென்ன பலன்கள் உள்ளன என்று பார்ப்போம்…

குளியல்

வெந்நீர் குளியல்:
மழை மற்றும் குளிர் காலங்களில் வெந்நீர் குளியல் நல்லது.
மாலையில் வெந்நீரில் குளிப்பதால் பதற்றம் குறையும். இதனால், இரவு நல்ல உறக்கம் வரும்.
தசைகள் தளர்வாகும். உடலில், வீக்கம் குறையும்.
மைக்ரேன் தலைவலி தற்காலிமாக சரியாகும்.
உடலில் ஏற்பட்ட வலி குறையும்.
குளிர் மற்றும் சளி காரணமாக மூக்கடைப்பு ஏற்படும். இதனால், சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.
சருமத்தில் உள்ள நுண்துளைகளில் உள்ள அடைப்பை நீக்கி தூய்மையாக வைத்திருக்கிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும்; கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை நீக்கும்.

shampu. 1 12345

குளிர்ந்த நீர் குளியல்:
நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் விழிப்புஉணர்வு அதிகமாகும். நமது சுவாசம் ஆழமாக, நிதானமாக இருப்பதால், நம் கவனத்திறன், சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. செயல் வேகம் அதிகரிக்கிறது.
ஜலதோஷம் வராமல் உடலைப் பாதுகாக்கும் . குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphoctes) எனப்படும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடி அதிகரிக்கும்.
மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குளிர்ந்த நீரில் நீராடும்போது குறைகிறது.
உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி, நச்சுத்தன்மைகள் வெளியேறுவதற்கு வளர்சிதை மாற்றம் அவசியம். குளிர்ந்த நீரில் குளிப்பதால், இந்தப் பணி சீராக நடக்கிறது.
மூளை, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் .
சருமத்தை இறுகச்செய்து, வயோதிகத்தைத் தள்ளிப்போடும் .
தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய் நம் கூந்தலைப் பாதுகாக்கிறது. குளிர்ந்த நீர் அதைத் தலையில் இருந்து முற்றிலும் நீக்காமல் பாதுகாப்பதால், தலை முடி உதிராமல் இருக்கும் .
கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button