hairfall 08 1475924631
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்வதைத் தடுக்க க்ரீன் டீயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

க்ரீன் டீ உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் தான் ஊக்குவிக்கும். அதுவும் க்ரீன் டீ தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் என்பது தெரியுமா? அதுமட்டுமின்றி மயிர்கால்கள் வலிமையடைவதோடு, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மேலும் க்ரீன் டீயில் உள்ள எபிகேலோகேட்டசின் கேலேட், பாதிக்கப்பட்ட மயிர்கால்களைப் புதுப்பித்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தலைமுடி உதிர்வதைத் தடுக்க க்ரீன் டீயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுத்துள்ளது.

க்ரீன் டீ மற்றும் கடுகு பொடி மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் கடுகு பொடியுடன் 2 டீஸ்பூன் க்ரீன் டீ மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப் அணிந்து 15-25 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் அவகேடோ மாஸ்க்
அவகேடோ பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து, அதோடு சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலையில் தடலி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலசினால், அதில் உள்ள புரோட்டீன், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, அடர்த்தியை அதிகரிக்கும்.

க்ரீன் டீ மற்றும் தேங்காய் எண்ணெய்
க்ரீன் டீயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, பின் அலச, முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

க்ரீன் டீ மற்றும் புதினா
1/2 லிட்டர் நீரில் க்ரீன் டீ இலைகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 1/2 மணிநேரம் கழித்து, அத்துடன் 1 எலுமிச்சையைப் பிழிந்து, அக்கலவையை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் ஹென்னா
இரவில் படுக்கும் போது, ஹென்னா பொடியில் க்ரீன் டீ சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் அடர்த்தி மேம்படுவதோடு, தலைமுடி உதிர்வது குறையும்.

hairfall 08 1475924631

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பொடுகுதொல்லையா? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க… இரண்டே நாளில் போயிடும்…!

nathan

முடிப்பிளவுகளை தடுக்கும் வழிகள்

nathan

கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? கவலைய விடுங்க

nathan

தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பொடுகு, இளநரை!! தடுக்கலாம் விரட்டலாம்!- வீட்டிலேயே தீர்வு ரெடி

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக கருமையாக்கும் ப்ளாக் டீ!

nathan