ஆண்களுக்கு

ஆண்களே வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் ஊர் சுற்றுவார்கள். என்ன தான் ஆண்கள் வெளிப்படையாக தங்கள் அழகின் மீது அக்கறை காட்டிக் கொள்ளாதவாறு இருந்தாலும், வீட்டில் இருக்கும் போது தங்களை அழகுப்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். அதற்காக பெண்களைப் போன்றே கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

முக்கியமாக ஆண்கள் வெள்ளையாக விருப்பப்படுவார்கள். வெயிலில் அதிகம் சுற்றுவதால், ஆண்களின் சருமம் விரைவில் கருமையாகிவிடும். இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அங்கு அதில் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றினை நீரில் சரிசம அளவில் கலந்து, சருமத்தின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை பெரும்பாலான வீட்டில் கற்றாழை இருக்கும். அத்தகைய கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு காலையிலும், மாலையிலும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

கடலை மாவு கடலை மாவுடன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். இந்த முறையை ஆண்கள் தினமும் பின்பற்றி வந்தால், கருமை நீங்குவதோடு, முகம் பொலிவு பெறும்.

சந்தனம் சந்தனப் பொடி குளிர்ச்சிமிக்கது மற்றும் இது சரும கருமையைப் போக்கவல்லதும் கூட. அத்தகைய சந்தனப் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயைக் கொண்டு தினமும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும்.

முல்தானி மெட்டி 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.

22 1461291760 do looks affect job search1 17 1476687040

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button