சைவம்

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி

குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 கப்
நீர் – 1 1/2 கப்
பன்னீர் – 200 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
நெய் – தேவையான அளவு
தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தயிர் – கால் கப்

அரைக்க :

கொத்தமல்லித்தழை – 1 கப்
பச்சை மிளகாய் – 4
பட்டை – 1 சிறிய துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
நட்சத்திர சோம்பு – 1

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* எண்ணெயில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த விழுதையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.

* அடுத்து தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்

* அடுத்து அதில் பொரித்த பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்

* எல்லாம் நன்றாக சேர்ந்து வரும் போது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது அரிசி, கொத்தமல்லி தழை சேர்க்கவும்

* இப்போது குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.

* சூப்பரான பன்னீர் பிரியாணி ரெடி.

* சூடான பன்னீர் பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.201702011523561110 how to make paneer biryani SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button