மருத்துவ குறிப்பு

கணுக்கால் வலி வரக்காரணமும் – தீர்வும்

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே, கணுக்கால் வலி உண்டாகின்றது. கணுக்கால் வலியை போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கணுக்கால் வலி வரக்காரணமும் – தீர்வும்
உடல் வலி என்பது, உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஏற்படுகிறது. தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போல, கால் பாதங்களில் கணுக்காலில் வலி ஏற்படுகிறது. இந்த கணுக்கால் வலி, ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலி, 35 வயது முதல் வரும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து, பாதிப்பு இருக்கும்.

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே, கணுக்கால் வலி உண்டாகின்றது. கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் காணப்படும்.
காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது.

வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும். பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில், நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

இதற்கான காரணங்கள் :

வாதம், பித்தம், கபம் போன்றவற்றால் பித்தநீர் அதிகமாகி, வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து, தலை வலியை ஏற்படுத்துகிறது. இப்படி தலையில் கோர்க்கும் நீர், கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

இதுபோல் தான் கப தோஷமும். பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து, கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது. பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள் கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீர், வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீர், உப்புப் படிவமாக மாறி, கட்டிபோல் உருவாகிறது. பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும். உடல் எடை அதிகரித்தாலும், கணுக்கால் வலி உண்டாகும். மது, புகை போன்ற போதை பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி, கணுக்கால் வலி உண்டாகும்.

கணுக்கால் வலியை போக்க :

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டு பண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது. நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது. கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில் லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது. மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது.

நீண்ட தூக்கம் கொண்டால், உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால், இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.201702011350100091 ankle pain reason solutions SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button