28.6 C
Chennai
Monday, May 20, 2024
v0lIukU
சிற்றுண்டி வகைகள்

பால் அடை பிரதமன்

என்னென்ன தேவை?

அரிசி – 1 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
வாழை இலை – ஏடுகள்,
தேங்காய்ப்பால் – 3 கப் (ஒரு பெரிய முழு தேங்காய்),
வெல்லம் – 1 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
முந்திரி – 10-15,
திராட்சை – 10-20,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகாக காய்ச்சி வடித்து கொள்ளவும். அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நைசாக தோசைமாவுப் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இதை வாழை இலை ஏடுகளில், தலா 1 கரண்டி ஊற்றி பரப்பி, இலையை மெதுவாக சுருட்டி (உருட்டி) ஆவியில் வேகவைத்து எடுத்து, ஆறியதும் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி, பலமுறை கழுவி வைக்கவும். அடை ரெடி.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் மூன்றாவது பால் சேர்த்து கொதிக்கவிட்டு, செய்துள்ள அடையை சேர்த்து கைவிடாமல் கிளறவும். அது பாதி வெந்ததும், இரண்டாவது பாலைச் சேர்த்து கிளறவும். அது சிறிது கெட்டியாக வந்ததும், வெல்லப்பாகு சேர்த்து கொதி வந்ததும், முதல் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து படைத்து பரிமாறவும்.v0lIukU

Related posts

சூப்பரான பேல் பூரி சாண்ட்விச்

nathan

ஸ்வீட் கார்ன் சௌடர்

nathan

பாலக் ஸ்பெகடி

nathan

ஸ்நாக்ஸ்: சீப்பு சீடை செய்வது எப்படி

nathan

ஆப்பம் செய்வது எப்படி?

nathan

நார்த்தம்பழ சேமியா ரவா கிச்சடி

nathan

சாமை கட்லெட்

nathan

கேழ்வரகு இனிப்பு தோசை

nathan

சப்பாத்தி – தால்

nathan