சைவம்

பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அந்த உருளைக்கிழங்கை வைத்து பூரிக்கு தொட்டு கொள்ள ஈஸியான குருமா செய்வதென்று பார்க்கலாம்.

பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் உருளைக்கிழங்கு குருமா
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 3
பட்டை – 1 இன்ச்
இலவங்கம் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
கசகசா – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பாதி கிழங்கை மசித்து கொள்ளவும். மீதி கிழங்கை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தேங்காயை துருவிக் கொள்ளவும்.

* மிக்ஸியில் தேங்காய், கசகசா போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் அதில் மசித்த மற்றும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

* நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு கிளறி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
* இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி!!!

* இதனை சாதம், சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.201702031533330856 potato kurma SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button