26.7 C
Chennai
Thursday, Feb 6, 2025
1473746533 3338
சிற்றுண்டி வகைகள்

இனி பட்டர் நாண் சாப்பிட ஹோட்டலுக்கு போக தேவையில்லை…

வட இந்தியர்களின் உணவு வகை நாண். நாண் என்பதும் சப்பாத்தி வகையை சேர்ந்த உணவு. உங்களுக்கு நாண் பிடிக்கும் எனில் அதனை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2 கப்
ட்ரை ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2/3 கப்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.

2. பிறகு அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை மாவை வைக்க வேண்டும்.

3. நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இதோ சுவையான பட்டர் நாண் தயாராகிவிட்டது. அதன் மீது சிறிது வெண்ணெயை தடவி பரிமாறலாம்.1473746533 3338

Related posts

சுவையான ஜிலேபி,

nathan

சுவையான கடலை மாவு போண்டா

nathan

அவல் வேர்க்கடலை பக்கோடா…

nathan

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

nathan

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan

சுவையான முடக்கத்தான் கீரையில் தோசை

nathan

கேரளத்து ஆப்பம் செய்முறை

nathan

சுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan