கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை சிசுவை பாதிக்குமா?

கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை சிசுவை பாதிக்குமா?
கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின் போது பொதுவாக அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால் ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும்.

தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும்.

கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள்,சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. வலி நிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும்.

இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைகீரை, அரைக்கீரை, ஆரைக்கிரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.

இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத்தங்களி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.201702041202419521 anemia during pregnancy affect infant SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button