சிற்றுண்டி வகைகள்

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘பீட்ஸா தோசை’ பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலக்ஷ்மி.

தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப்
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – இரண்டு டேபிள்ஸ்பூன்
குடமிளகாய்(பொடியாக நறுக்கியது) – இரண்டு டேபிள்ஸ்பூன்
தக்காளி(பொடியாக நறுக்கியது) – இரண்டு டேபிள்ஸ்பூன்
காளான்(பொடியாக நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் – இரண்டு டேபிள்ஸ்பூன்
சீஸ்(துருவியது) – இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி சூடானதும் ஒரு கரண்டி மாவை சற்று கனமாக பரப்பிவிடவும். தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸையும், அதன்மேல் வதக்கிய காய்கறிகளையும், துருவிய சீஸையும் பரப்பிவிட்டு வேகவிடவும். சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.Pizza Dosa 111 fin 17085

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button