முகப் பராமரிப்பு

உங்கள் மூக்கின் அழகை பராமரிக்க டிப்ஸ்

முகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்கள் மூக்கின் அழகை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

உங்கள் மூக்கின் அழகை பராமரிக்க டிப்ஸ்
முகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கிளி மூக்கு போன்றும், குடைமிளகாய் போன்று பெரியதாகவும் இருக்கும். ஆனால் எப்படிப்பட்ட தோற்றம் இருந்தாலும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் கவலைப்படத் தேவையில்லை.

வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும்.

வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை திசு பேப்பரால் துடைத்து எடுத்து விடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக தடவ வேண்டும்.

இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும்.

பொதுவாக இந்த வகை மேக்கப்பை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும். 201702061132424802 maintain the beauty of your nose SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button