சூப் வகைகள்

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அடிக்கடி கொடுப்பது மிகவும் நல்லது. இந்த வெண்டைக்காயை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்
தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – 10
தக்காளி, பெரிய வெங்காயம் – தலா ஒன்று,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
காராபூந்தி – சிறிதளவு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
துவரம்பருப்பு நீர் – 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்),
சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு வழவழப்பு போகும் வரை வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்).

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* இரண்டும் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

* இதனுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

* கடைசியாக எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

* சத்தான சுவையான வெண்டைக்காய் சூப் ரெடி.

* மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.201702061039498498 Lady Finger soup SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button