கால்கள் பராமரிப்பு

ஹை ஹீல்ஸ் செருப்பால் அவதிப்படும் பெண்கள்

அழகாக இருக்கிறது என்று நினைத்து ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை அணிந்துவிட்டு, அதனால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

ஹை ஹீல்ஸ் செருப்பால் அவதிப்படும் பெண்கள்
அழகாக இருக்கிறது என்று நினைத்து ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை அணிந்துவிட்டு, அதனால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

குதிகால் செருப்பணியும் 60 சதவீத பெண்கள் கால் வலியுடன் அவதிப்படுகிறார்கள். அதில் குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு கால்களில் சுளுக்கும் ஏற்படுகிறது. எதனால் வலி ஏற்படுகிறது என்று தெரியாமலே, கால் வலியோடு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செருப்புகளை அணியும் பெண்களில் பலரும் குதிகாலின் பின்பக்கம் சிவந்து வீங்கும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதை அவர்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணிந்து நடக்கும்போது அது குதிகாலின் உள்எலும்பில் கீறலை ஏற்படுத்தலாம்.

அன்றாடம் குதிகால் செருப்பை அணிந்து நடக்கும் மாடலிங் பெண்கள் அவ்வப்போது நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரியான வலியால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால் ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலியாக மாறும். குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணிந்துகொண்டு நடக்கும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப்போகும். அதன் அதிக பயன்பாடு முதுகுத் தண்டில் விரிசலை ஏற் படுத்தும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் முழங்கால் மூட்டுவலியும் தோன்றும்.

‘குதிகால் செருப்பு அணிய ஆசையாக இருக்கிறது. அதே நேரத்தில் பாதிப்பும் ஏற்படக்கூடாது’ என்று நினைப்பவர்கள், கடைப்பிடிக்கவேண்டிய விஷயம் என்ன தெரியுமா?

நீங்கள் அணியும் செருப்பு அதிக குதிகால் உயரம் கொண்டதாக இருக்கவேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியம் தருவதாக இருக்கவேண்டும் என்று கருதுங்கள். அதனால் உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை வாங்கவேண்டாம்.

செருப்பு தேர்ந்தெடுக்க காலை நேரத்தைவிட, இரவு நேரமே சிறந்தது. ஏன்என்றால் இரவு நேரத்தில் கால் சற்று வீக்கமாக காணப்படும். அப்போது நீங்கள் அணிந்து தேர்ந்தெடுக்கும் செருப்புகளே உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

நீங்கள் சற்று குள்ளமாக இருப்பதை ஒரு குறையாக நினைக் காதீர்கள். பொருத்தமான, சவுகரியமான செருப்புகளை அணிந்தால் அதுவே அழகுதான். அதனால் உயரத்தை கூட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை வாங்கிவிடவேண்டாம். 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகள் ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை. தோல் செருப்புகள் ஈரத்தை உறிஞ்சும் தன்மைகொண்டவை. அவைகளை அணிந்தால்தான் கால்களுக்கு காற்றோட்டம் கிடைக்கும். அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும். 201702061023325392 High Heel Sandals Women problem SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button