சிற்றுண்டி வகைகள்

சத்தான கம்பு – காலிபிளவர் அடை

சிறுதானியங்களில் கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கம்பு, காலிபிளவர் வைத்து சத்தான சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கம்பு – காலிபிளவர் அடை
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தயிர் – அரை கப்
காலிப்ளவர் – சிறியது 1
சீரகம் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
மிளகு பொடித்தது – அரை ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, உப்பு போட்டு 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 30 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.

* காலிபிளவரை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தி ஆறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்து கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.

* அடுத்து அந்த மாவில் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

* அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் இரண்டு கரண்டி மாவை விட்டு வட்டமான அடையாக பரப்பவும். அடையின் மேலும், சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

* ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

* கம்பு – காலிப்ளவர் அடை ரெடி.201702060900374881 Bajra Cauliflower adai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button