தலைமுடி சிகிச்சை

பொடுகைப் போக்கும் பொக்கிஷம் கற்றாழை..! நம்ம வீட்டு மூலிகை

தலைமுடி உதிர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பொடுக்கு தொல்லை. சரியாக தலைக்கு எண்ணெய் வைக்காமல் போவது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு பொடுகு ஏற்படுகிறது. கற்றாழை மூலமாக பொடுகை குறைக்கும் வழிமுறை குறித்துப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ராதா.

கற்றாழையால் கூந்தலுக்கு என்ன பலன்?

* தலைமுடியை வறட்சியில் இருந்து காப்பாற்றும். இறந்த செல்களை மீட்டு தலைமுடி வளர உதவும்.

* பாக்டீரியா தொற்று ஏற்படுவதை தடுத்து தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக்கும்.

* கூந்தல் வலுவில்லாமல் உடைவதை தடுத்து அடர்த்தியாக வளர உதவும்.

* கற்றாழையில் கூந்தலுக்கு தேவையான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன.

* தலைமுடியின் வேர்க்கால்களில் பரவும் பொடுகுத் தொற்றை வரவிடாமல் தடுக்கும்.

* தொடர்ந்து முறையாகப் பயன்படுத்தினால் பட்டுப் போன்ற கூந்தலைப் பெறுவதுடன் பேண் தொல்லையும் இருக்காது.

கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

* கற்றாழையை துண்டாக வெட்டி அதன் மேற்புறத் தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவில் தூங்கும் போது தலையில் தேய்த்து கொண்டு காலையில் குளிக்கலாம். உடல் சூடு குறைவதால் பொடுகு நீங்கும். குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் தவிர்க்கவும்.

* கற்றாழையின் ஜெல்லுடன் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து குளித்தால் தலைமுடி பளபளப்பாவதுடன் உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.

* எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் கற்றாழையின் ஜெல்லை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் சேர்த்து ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை ஜெல், செம்பருத்திப்பூ, எலுமிச்சைச்சாறு மூன்றையும் சேர்த்து அரைத்து ஊற வைத்துக் குளித்தால் பொடுகு காணாமல் போவதுடன் தலைமுடி கருகருவென வளரும்.

* இந்த மூலிகையை வீட்டில் வளர்க்க இயலாதவர்கள் கடைகளில் கிடைக்கும் ஜெல்லை வாங்கி தேய்த்து குளிக்கலாம்.

எனவே , தலைமுடியை பொடுகு தொல்லையில் இருந்து பாதுகாக்க இயற்கையில் நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய கற்றாழையைப் பயன்படுத்திப் பலன்பெறலாம்.kk2 15545

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button