தலைமுடி சிகிச்சை

பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலுக்கான முதன்மையான 10 காரணங்கள்!!!

ஒரு பெண்ணின் உடல் வாழ்நாள் முழுவதும் பல விதமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த மாற்றங்களினால் சில சமயத்தில் அவர்களுக்கு முடி கொட்டுதலும் கூட ஏற்படலாம்.

ஆனால் இந்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு, அது ஏற்படுவதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அப்போது தான் சரியான சிகிச்சை முறையை பரிந்துரைக்க முடியும்.

பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலுக்கான பொதுவான 10 காரணங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படியானால் அதற்கான தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மோசமான கூந்தல் ஒழுக்க நெற

ி வலுப்படுத்தும் கருவி அல்லது கர்லிங் அயர்ன் போன்ற சிகை அலங்கார கருவிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும், கூந்தலுக்கான பொருட்களான ஜெல், ஸ்ப்ரே, ஹேர் டை போன்றவற்றை அதிகமான பயன்படுத்தினாலும், உங்கள் மயிர்த்தண்டு பாதிக்கப்படும். இவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கூந்தலில் வளர்ச்சியும் கூட தடைப்படும். இறுக்கமான போனி டெயில், தவறாக உச்சி எடுத்து சீவுதல், முடியை வகுடெடுத்தல் போன்றவைகளும் கூட முடியின் நிலையை மோசமடையச் செய்யும்.

பி.சி.ஓ

இந்த நிலையில், ஆண்களின் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இதனால் கருப்பையில் சிறிய நீர் கட்டிகள் உருவாகும். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் சமமின்மையினால் தான் இந்நிலை ஏற்படுகிறது. இதனால் உங்கள் கூந்தல் வளர்ச்சியும் கூட வெகுவாக பாதிக்கப்படுகிறது.

இரத்த சோகை

ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவாக இருக்கையில் இரத்த சோகை ஏற்படும். மாதவிடாய் பலமாக இருப்பதாலும், தங்கள் உடலில் போதிய ஃபோலிக் அமிலம் இல்லாததாலும், பல பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் ஹீமோகுளோபின் உற்பத்தி குறையத் தொடங்கும். இதனால் உடல் உறுப்புகளுக்கு குறைவான அளவிலேயே ஆக்சிஜென் செல்லும். உங்கள் மயிர்த்தண்டிற்கு ஆக்சிஜென் செல்லவில்லை என்றால் அவை வலுவிழந்து, எளிதில் உடையக் கூடும். இதனால் முடி உதிர்தல் ஏற்படும்.

மாதவிடாய்

ஒரு பெண்ணின் இறுதி மாதவிடாயின் போது அவர் உடலில் பல மாற்றங்களை அனுபவிப்பார். அதில் ஒன்று தான் முடி கொட்டுதல். அதற்கு காரணம் அவர்களுடைய உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் குறைவாக இருப்பதே. போதிய பராமரிப்பை மேற்கொள்ளவில்லை என்றால், அவர்களின் முடி வறண்டு போய், முடி கழிதல் ஏற்படும். அதனை பராமரிக்க மிதமான ஷாம்புக்கள், கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்; அதேப்போல் சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பிரசவம்

பிரசவத்திற்கு பிறகு பல பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு காரணம், கர்ப்பமாக இருக்கும் போது, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். அதனால் தலையின் முடி அதிகமாக இருக்கும். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அந்த ஹார்மோன்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இதனால் முடி உதிர்தலை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இது தற்காலிக நிலையே. சில வாரங்கள் கழித்து, முடியின் வளர்ச்சி மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கும்.

புரதச்சத்து குறைபாடு

நம் முடி கெராட்டீன் என்ற புரதத்தால் செய்யப்பட்டுள்ளது. நாம் புரதச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உண்ணவில்லை என்றால், அது நம் உடலை விட்டு வெளியேற தொடங்கும். இதனால் முடி உடையத் தொடங்கும். அதன் விளைவாக வலுவிழக்கும் உங்கள் முடி உதிர தொடங்கும்.

மருந்துகள்

குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகளை உண்ணும் பெண்கள், அவைகளை தடாலடியாக நிறுத்திவிட்டால், பக்க விளைவுகளை காண நேரிடலாம். மற்ற ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகளுக்கும் கூட இதே அளவிலான தாக்கங்கள் உண்டு. ஹீமோதெரபி சிகிச்சைக்கும் கூட முடி உதிர்தல் ஏற்படும்.

கடுமையான உடல் எடை

குறைவு திடீரென கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு, அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைக்கும் போது, உங்கள் முடியின் மீது அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு காரணம், இவ்வகையான டயட்கள் உங்கள் உடலுக்கு செல்ல வேண்டிய ஊட்டச்சத்துக்களுக்கு தடை விதிக்கும். அப்படி இல்லையென்றால் முடி வளர்ச்சிக்கு தேவையான குறிப்பிட்ட சில உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பதும் ஒரு காரணம்.

தைராய்டு, ஆட்டோ இம்யூன் போன்ற சில மருத்துவ சுகவீனங்கள்

ட்ரையோடோத்திரோனைன் மற்றும் தைராக்சைன் ஹார்மோன்களை சுரக்கும் பொறுப்பை கொண்டுள்ளது தைராய்டு. உங்கள் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் இவைகள். ஒருவர் அதிதைராய்டிசம் அல்லது தாழ்தைராய்டிசம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இந்த ஹார்மோன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும். இதனை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், குறைபாடுகள் உண்டாகும். இதனால் உங்கள் உடலில் ஏற்பட போகும் மாற்றங்களில் ஒன்று தான் முடி உதிர்தல். ஆட்டோ இம்யூன் நோய் என்றால் நம் சொந்த அணுக்கள் மற்றும் திசுக்களுக்கு எதிராகவே நம் உடல் பிறபொருளெதிரிகளை உருவாக்கும். அவை உங்கள் முடியையும் தாக்குவதால் முடி உதிர்தல் ஏற்படுகிறது.

வேறு ஏதேனும் கடுமையான அல்லது தீவிர மருத்துவ நிலைகள்

சர்க்கரை நோய், சொரியாசிஸ் போன்ற சில மருத்துவ நிலைகளாலும் கூட முடி கொட்டும். சர்க்கரை நோய் இருக்கும் போது உங்கள் உடலின் இரத்த ஓட்ட அமைப்பு வெகுவாக பாதிக்கப்படும். சர்க்கரை நோயால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், மயிர்த்தண்டுகள் செத்துப் போகும். இதனால் முடி கழியும். சொரியாசிஸ் எனப்படும் சரும நோய் இருந்தாலும் தலைச்சருமம் மற்றும் மயிர்த்தண்டுகள் பாதிக்கப்படும். தினமும் 60-100 முடிகள் உதிர்வது இயல்பே. ஆனால் அதற்கு மேல் முடி உதிர்தல் இருந்தால், அது பிரச்சனையே. இதனை நீங்கள் கவனித்தால், உங்கள் உடலை சோதித்து கொண்டு, முடி உதிர்வு ஏற்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது நல்லது.

23 1435035184 hh10

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button