திடீரென ஏற்படும் சரும மாற்றங்களை சமாளிப்பது எப்படி?

images3மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, அவர்களின் தோலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சில் பொதுவான காரணங்கள் உள்ளன., மன அழுத்தம், போதுமான தூக்கம் இல்லாதது, எண்ணெய் பதார்த்தங்கள், இறந்த செல்களால் முகத்தில் ஏற்படும் அடைப்பு, கரும் புள்ளிகள், இவை அனத்தும் சரும பிளவுகளை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள். இவற்றை திடீரென‌ சமாளிக்க சில வழிகள் உள்ளன:

 

நம் சருமத்தை எண்ணெய் பசை இல்லாத சருமமாக வைத்துக் கொள்ள, ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை சுத்தமாக‌ கழுவ வேண்டும். ஒரு சுத்தமான மென்மையான பேஸ் வாஸை பயன்படுத்தி உங்கள் சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்ய முடியும்.
படுக்கைக்கு செல்லும் முன், உங்கள் ஒப்பனைகளை, ஒரு நல்ல ஒப்பனை(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்) நீக்கியை கொண்டு நீக்கிய பின்னரே படுக்க செல்ல வேண்டும்..ஒப்பனையோடு இரவு தூங்கினால், உங்கள் சரும‌ துளைகள் அடைத்துக் கொள்வதோடு, உங்கள் சருமம் சுவாசிப்பதையும் த‌டை செய்கிது தேவையற்ற பிளவுகளை ஏற்படுத்துகிறது.
வழக்கமான உடற்பயிற்சி பிளவுகளை குணப்படுத்த உதவுகிறது இதனால் முழுமையாக குணமாகாது என்றாலும், குணமாவதற்கு வழிவகுக்கிறது என்று சொல்லலாம்.

நாம் குடிக்கும் தண்ணீரின் அளவவை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை பழக்க படுத்திக் கொள்ள‌ வேண்டும்.

முகப்பருவை தொடுவதின் மூலமோ, கிள்ளுவதினாலோ இது சீக்கிரமாகவும் பரவுகிறது. இந்நிலை மிகவும் சுகாதாரமற்ற ஒன்றாகும். எனவே அடிக்கடி முகத்தில் கைகளையோ, விரல்களையோ வைப்பதை தவிர்க்கவும்.
இரவில் படுக்கைக்கு செல்லும் முன் பற்பசை கொண்டு உங்கள் முகப்பருவின் மீது தடவி கொண்டு படுக்கவும். காலையில் அதை கழுவி விடவும். இதனால் முகப்பரு தோற்றத்தை சிறிது குறைத்து காட்டும்.

Leave a Reply