34.3 C
Chennai
Wednesday, Jul 24, 2024
201702071207212478 Beauty Tips for women who wear glasses SECVPF
முகப் பராமரிப்பு

கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ்

முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ்
கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது.

தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.

கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்று சில டிப்ஸ்:

நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்துதான். உங்கள் புருவம் சீர்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள். உங்கள் கண்ணாடி உங்கள் புருவத்துடன் போட்டி போட வேண்டிய அவசியமில்லை. உங்கள் புருவங்களை சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள். இந்த வகையில் உங்கள் கண்களுக்கான மேக்கப் அலங்கரிக்கப்படும். நல்ல முறையில் ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள் கறை இல்லாமல் சரியாக இருக்கும்.

கண்இமை, ரோமங்களை சுருட்டிவிடுங்கள். உங்கள் பணியை திறம்பட செய்து முடித்திட அடிப்படை கர்லர் ஒன்றே போதும். இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களுக்கு மேக்கப் சிறப்பாக அமையும். பெண்கள் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கண்ணாடி பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும். நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள்.

கண்ணாடி அணிந்திருக்கும் உங்களுக்கு, இதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போய், உங்கள் கண்ணுக்கு அழகு சேர்க்கும். நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்அப் செய்யும்போது, உங்கள் கண்கள் சிறியதாக தெரிந்தால் கண்களை சுற்றி ஐ-லைனரை பயன்படுத்துங்கள். ஒருவேளை, கண்கள் பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.

உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். கண்ணாடி அணிந்தவர்களுக்கு உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும். கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.201702071207212478 Beauty Tips for women who wear glasses SECVPF

Related posts

சிவப்பழகு ஸ்க்ரப்

nathan

முகப்பருவிலிருந்து விடுதலை பெற……

nathan

பெண்களே அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க…

nathan

கருவளையத்தை போக்கும் ஒரு மேஜிக் குறிப்பு !!

nathan

சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்க இத செய்யுங்கள்!…

sangika

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறைய இதை முயன்று பாருங்கள்!

nathan

வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய இதை செய்யுங்கள்!…

nathan

உங்களுக்கு மூன்றே நாட்களில் கருவளையம் நீங்கணுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க உடலில் கருப்பு மற்றும் சிகப்பு புள்ளிகள் ஏற்படாமல் இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan