மருத்துவ குறிப்பு

ரிஸ்க் எடுக்க தயக்கம் வேண்டாம் பெண்களே!

‘ரிஸ்கெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவதுபோல’ என்று திரைப்பட வசனத்தைக் கேட்டு எல்லோரும் சிரித்திருப்போம். ஆனால், சற்று யோசித்துப் பார்த்தால் ரிஸ்க் எடுப்பதற்கு ஆண்கள் இருக்கும் வாய்ப்புகள் அளவுக்கு பெண்களுக்கு இருக்கிறதா என்ன?

பெரும்பாலான பெண்கள் , ‘அந்தளவுக்கு இல்லை’ என்றே சொல்வர். தயக்கம் உடைப்படும் காலம் வந்துவிட்டது நண்பர்களே.

ஏனெனில், ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு வாசற்படியைத் தாண்டக்கூடாது என இருந்தது. அது உடைக்கப் பட்டது. கல்விப் பயிலக் கூடாதென்ற தடையைத் தகர்க்க பலரின் உழைப்பு தேவைப்பட்டது. இப்படி ஒவ்வொன்றாக தகர்ந்து இன்று அனைத்து துறைகளிலும் இடம்பிடித்து விட்டனர் பெண்கள். ஆனாலும் சிலவற்றில் சில ரிஸ்க் எடுக்க தயக்கங்கள் இருந்தே வருகின்றன இல்லையா?
படிப்பே மூலதனம்: எல்லோருக்குமே கல்வி மிகப் பெரிய சொத்து என்றாலும் பெண்களுக்கு இன்னும் அளப்பரிய சொத்து. அதனால், உங்கள் மகள்/ தங்கை படிக்கும்போது ஏதேனும் ஒரு வகுப்பில் தேர்ச்சி அடையாமல் இருந்துவிட்டால் படிப்பை நிறுத்திவிடாதீர்கள். சிலர் நிறுத்தச் சொல்லி தடை விதிக்கலாம். நான் அவளுக்கு கியாரண்டி எனச் சொல்லி ரிஸ்க் எடுங்கள்.
p46b 20131

விருப்பமான படிப்பு: 10, 12 -ம் வகுப்புகள் முடிந்ததும் அடுத்த என்ன பிரிவில் படிப்பது எனப் பெரும் குழப்பம் வரும். ஆண் பிள்ளைகள் தனக்கு உரிய படிப்பைச் சொல்லி பெற்றோர்களிடம் ஓகே வாங்கி விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் படிப்புப் பிரிவு அந்த ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரில் இருந்தால் மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளியூரில் சென்று எப்படி தனியாக படிப்பாய்? என கூட இருப்பவர்கள் நாளைக்கு நான்கு முறை சொன்னால் அந்தப் பெண்களே சின்ன தயக்கம் வந்து அதுவே பெரும் தடையாகி விடும். இன்னும் சில பெற்றோர்கள் பெண்கள் ஏதேனும் தவறான பழக்கத்திற்கு உள்ளாகி விடுவார்களோ என அஞ்சுவார்கள். அவர்களிடம், நான் உங்கள் மகள்; என்னை நம்புங்கள். நான் தனியே படிக்க பயப்பட மாட்டேன் என்று கூறுங்கள். எதற்கு ரிஸ்க் என்று தயங்கினால், விருப்பமே இல்லாத படிப்பில் மாட்டிக்கொள்வீர்கள்.
Wedding rings 20334

திருமணம்: ஒருவர் வாழ்வில் திருமணம் மிக முக்கியமானது. இதில் தமது விருப்பமா… பெற்றோரின் விருப்பமா… என்பதில் குழப்பம் வரும். இதில் நீங்கள் முடிவெடுக்க வேண்டியது. நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வழிச் செய்யும் துணையைத் தேர்ந்தெடுப்பதுதான். காதல் திருமணமா.. பெற்றோர்களால் பார்த்து செய்துவைக்கப்படும் திருமணமா என்பது எல்லாமே இதற்குள் அடங்கி விடும். முடிந்தளவு எல்லோரின் சம்மதத்திற்கான முடிவுகளுக்காக காத்திருப்பது கூட சில சமயங்களில் ரிஸ்க் என்று சொல்லப்படும் அதையும் செய்யத் தயாராகுங்கள்.

வேலை: வேலைக்குச் செல்வது பெண்களுக்கு இன்னும் பெரிய புதிய உலகைத் திறக்கும். பொருளாதாரம் பெண்ணை தன் காலிலேயே நிற்கச் செய்யும். ஆனால், வேலைக்குச் செல்ல வேண்டுமா எனக் குடும்பத்தில் யாரேனும் தடை விதிக்கக்கூடும். ஆனால், வேலைக்குச் செல்ல முழு விருப்பம் எனில், பேசி புரிய வையுங்கள். அதற்கு சில சிரமங்கள் இருக்குமே என்றால் அதை, தான் சமாளித்து விடுவதாக கூறுங்கள். பெரியவர்களே சொல்லி விட்டார்களே என உங்களின் படிப்பையும் விருப்பத்தையும் பீரோவில் பூட்டி வைத்துவிடாதீர்கள். ரிஸ்க் எடுப்பது நல்லது.

இது மட்டுமல்ல, குழந்தைப் பெற்றுக்கொள்வதில் பெண்களின் விருப்பம், வீடு வாங்கும் இடம், உள்ளிட்டவற்றைப் பற்றி உங்களின் கருத்து என ஒவ்வொரு விஷயத்தின்போதும், மிகத் தெளிவாக உங்களின் கருத்துகளை முன் வையுங்கள். நீங்கள் சொல்வது சரியாக இருக்கும்பட்சத்தில் உறுதியாக இருங்கள்.எதிர்கொள்ளும் சம்பவங்களின் அனைத்துக் கோணங்களையும் பாருங்கள். பயமின்றி ரிஸ்க் எடுங்கள். வாழ்க்கை உங்களின் விருப்பத்திலிருந்து விலகாதிருக்கட்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button