கர்ப்பிணி பெண்களுக்கு

குறைந்த எடையில் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி?

எடை குறைவாக பிறந்த குழந்தைகளை எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான கவனிப்பானது மிகவும் இன்றியமையாதது.

குறைந்த எடையில் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி?
எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது. இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியான உணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். இதனால் குழந்தை நிச்சயம் ஆரோக்கியமாகவும், மற்ற குழந்தைகளைப் போன்றும் நன்கு ஓடியாடி விளையாடும்.

பொதுவாக எடை குறைவாக பிறந்த குழந்தைகளை எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான கவனிப்பானது இன்றியமையாதது. சொல்லப்போனால், இந்த நேரத்தில் பெற்றோர்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது சிரமத்தை மனதில் கொள்ளாமல், சரியாக கவனித்தால், உங்கள் குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல் இருப்பார்கள்.

சரி, இப்போது அப்படி எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம். அதைப் படித்து பின்பற்றி, உங்கள் குழந்தையை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

குறைவான எடையில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்கும்.

மற்ற குழந்தைகளை விட, எடை குறைவாக பிறந்த குழந்ததையை மிகவும் கவனமாக தூக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், கைகளில் வைத்திருக்கும் போது, முக்கியமாக தலையை மிகவும் கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக எடை குறைவில் பிறந்த குழந்தை தூங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனேனில் இந்த மாதிரியான குழந்தைகளுக்கு SIDS (Sudden Infant Death Syndrome) என்னும் திடீரென குழந்தை இறப்பு நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், பெற்றோர்கள் குழந்தையை தங்களது வயிற்றில் தூங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

எடை குறைவில் குழந்தை பிறந்தால், அடிக்கடி தொடர்ச்சியாக பாலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு உடலில் சத்துக்கள் சேர்வதற்கு சற்று தாமதமாகும்.

மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தையைச் சுற்றியுள்ள இடங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த குழந்தைகளுக்கு நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். எனவே குழந்தையை சுற்றியுள்ள இடத்தை மட்டுமின்றி, குழந்தையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சளி, இருமல் போன்ற பிரச்சனை உள்ள மனிதர்களை குழந்தைக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம். ஏனெனில் குழந்தையின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், எளிதில் நோய்கள் தொற்றிக் கொண்டு, குழந்தையை பாடாய் படுத்திவிடும்.

குழந்தைகளுக்கு வைட்டமின்கள், இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம் போன்ற பல டானிக்குகளை மருத்துவரிடம் கேட்டு வாங்கி, அதனைக் கொடுத்து, குழந்தைகளின் எடையை அதிகரிக்க வேண்டும்.

குழந்தையின் எடை சரியான அளவில் வரும் வரை, பெற்றோர்களைத் தவிர வேறு யாரையும் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம்.201702091426193952 How to maintain a low weight in the newborn child SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button