சரும பராமரிப்பு

சரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்

சருமம் வறட்சியாவதை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி வந்தால் சருமம் ஊட்டச்சத்துக்களைப் பெற்று, சுருக்கங்கள், வறட்சி இன்றி அழகாகக் காணப்படும்.

சரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்
சருமத்தைச் சிலிர்க்கவைக்கும் குளிரும், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் மெல்லிய காற்றுமாக ஊரே ஜில்லென்று இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைபாடு என்றோ, நோய் என்றோ கருத முடியாது. தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் இந்தச் சிறிய விளைவுகளை எளிய வழிகளில் சரிசெய்ய முடியும். பனிக் காலத்திலும் மிருதுவான, பளபளப்பான சருமத்தைப் பராமரிக்க எளிய 7 வழிகள்…

கிளென்சிங்

இரண்டு டீஸ்பூன் பால் எடுத்து, ஒரு சிட்டிகைத் உப்பை சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த உப்பு கலந்த பாலை முகம், கழுத்தில் பூச வேண்டும்.

எக்ஸ்ஃபாலியேஷன் (Exfoliation)

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் முறை இது. ஒரு டீஸ்பூன் பாலுடன், அரை டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகம், மூக்கு ஓரங்கள், தாடைகள், கழுத்தில் பூசி, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டீமிங்

ஐந்து நிமிடங்கள் முகத்தில் ஆவிபடும்படி நீராவிப் பிடிக்கலாம். இந்தக் குளிர் காலத்தில் பலருக்கும் சளி பிடிக்கும். ஆவிபிடிக்கையில், சளிப் பிரச்சனையும் குறையும். அதேசமயம், சருமத்தில் உள்ள அழுக்குகள் அகன்று, சருமம் வழியாகக் கழிவுகளும் வெளியேறும். முகம் புதுப்பொலிவு பெறும்.

மசாஜ்

ஆப்பிள் – 3 துண்டு, வாழைப்பழம் – 1, ஸ்ட்ராபெர்ரி – 1, தேன் – 1 டீஸ்பூன், பால் ஆடை – 1 டீஸ்பூன் எடுத்து, நன்கு மசித்து முகம், கழுத்து முழுவதும் பூசவும். பின்னர், கீழிருந்து மேலாக, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும்போது சருமம் உலர்ந்தால், சாத்துக்குடி அல்லது ஆரஞ்சுப் பழச்சாற்றைக்கொண்டு கையை நனைத்து, மசாஜைத் தொடர வேண்டும். பழங்களிலிருந்து தேவையான ஊட்டச்சத்தை சருமம் உறிஞ்சிக்கொள்ளும்.

ஃபுரூட் பேக்

காஸ் (gauze) என்ற மெல்லிய துணி, கடைகளில் கிடைக்கும். அதை முகத்தில் போட்டு, மீதம் இருக்கும் பழக்கலவையை முகம், கழுத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடலாம் அல்லது பருத்திப் பஞ்சால் துடைத்துக்கொள்ளலாம்.

டோனிங்

இரண்டு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு அல்லது பன்னீர் கலந்து, டோனிங் தயாரிக்க வேண்டும். இதை, பஞ்சில் நனைத்து முகம், கழுத்தில் பூச வேண்டும்.

மாய்ஸ்சரைசிங்

வெளியில் செல்ல வேண்டும் என்றால், இந்த சிகிச்சைக்குப் பின், சருமத்தில் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்ளலாம் அல்லது மாய்ஸ்சரைசிங் கிரீம் தடவிக்கொள்ளலாம். குளிர் காலத்தில், குளித்து முடித்த பின் மாய்ஸ்சரைசிங் க்ரீம் தடவிக்கொள்வது நல்லது.

ஃபுரூட் பேக்கைக் குளிர்காலத்தில் வாரம் ஒருமுறை செய்துகொள்ள, சருமம் வறட்சியாவது தடுக்கப்படும். இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை என்பதால், சருமம் ஊட்டச்சத்துக்களைப் பெற்று, சுருக்கங்கள், வறட்சி இன்றி அழகாகக் காணப்படும்.201702091000090263 7 ways to prevent skin dryness SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button