சைவம்

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முளைக்கீரை, தயிர் சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

முளைக்கீரை – ஒரு கட்டு
தேங்காய் துருவல் – கால் கப்,
பச்சை மிளகாய் – ஒன்று,
புளிக்காத தயிர் – ஒரு கப்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – 1
பெருங்காயத்தூள்,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

* தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு வதங்கிய பின் முளைக்கீரையை போட்டு வேகவிடவும். கீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஆறவிடவும்.

* அடுத்து கீரையில்ல் தயிர் சேர்த்துக் கலக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து தயிர் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

* சத்தான முளைக்கீரை தயிர்க்கூட்டு ரெடி.

* சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இந்த முளைக்கீரை தயிர்க்கூட்டு சூப்பராக இருக்கும்.

குறிப்பு : இதேமுறையில் வாழைத்தண்டு, கோஸ் ஆகியவற்றிலும் தயிர்க்கூட்டு தயாரிக்கலாம்.201702090915093561 keerai curd recipe SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button