மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலத்தில் பழுப்பு நிறமுள்ள உதிரபோக்கா?

பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிடாய் காலத்தில் பழுப்பு நிறமுள்ள உதிரபோக்கா?
பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா?

பெண்களுக்கு வெளிப்படும் அடர் பழுப்பு நிறமுள்ள ரத்தமானது, பழைய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த ரத்தம் நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்டதால், கருப்பையை விட்டு வெளியேற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த வகை உதிரப்போக்கு அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.

சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது புதிய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த வகை நிறமுள்ள உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படும் ரத்தமாகும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகிறது.

இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறத்தில் உதிரபோக்கு வெளிப்பட்டால், அது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கின்றது. மேலும் இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாட்களில் மட்டுமே காணப்படும்.

கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பழுப்பு அல்லது கருப்பு நிறமுள்ள ரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது.

ஆரஞ்சு நிறத்தில் வெளிப்படுகின்ற உதிரபோக்கானது, கருப்பை வாயிலிருந்து திரவங்கள், உதிரத்துடன் கலந்து வெளியேறும் பொழுது இந்த ஆரஞ்சு நிறம் காணப்படுகிறது. ஆனால் இதில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வெளிப்பட்டால் அதற்கு கண்டிப்பாக கருப்பை தொற்று உள்ளது என்பதைக் குறிக்கிறது.201702081338103766 brown color of the menstrual period SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button