மருத்துவ குறிப்பு

வாந்தி, மயக்கம் தான் கர்ப்பத்தின் அறிகுறி என்று நினைப்பவரா? அப்படின்னா முதல்ல இத படிங்க…

திரைப்படங்களினால் பலரும் குமட்டல், வாந்தி தான் கர்ப்பமாக இருப்பதன் அறிகுறி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த அறிகுறிகள் அனைவருக்குமே இருக்கும் என்று கூற முடியாது என்பது தெரியுமா?

ஆம், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நம்ப முடியாத வேறு சில அறிகுறிகளும் தென்படும். அதிலும் இந்த அறிகுறிகளானது சாதாரணமாக நாம் சந்திக்கும் ஓர் பிரச்சனையாகவே இருக்கும். இங்கு அப்படி கர்ப்பமாக இருந்தால் தென்படும் அசாதாரண அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து நீங்களும் இந்த மாதிரியான அறிகுறிகளை சந்தித்ததுண்டா என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெள்ளைப்படுதல் கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பில் அதிகப்படியான இரத்த ஓட்டம் இருக்கும். இப்படி இரத்த ஓட்டம் அவ்விடத்தில் அதிகம் இருப்பதால், வெள்ளைப்படுதல் ஏற்படும். மேலும் கருவானது கருப்பையில் பொருந்தும் போது பிறப்புறுப்பில் பிசுபிசுப்பான வெளிர் நிறத்தில் வெள்ளைப் படுதலை சந்திக்க வேண்டிவரும்.

முகப்பரு உங்களுக்கு முகப்பருவின் தாக்கம் அதிகம் இருந்தால், அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. இதற்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களும் ஓர் காரணம் எனலாம்.

வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றில் வலியுடன் கூடிய எரிச்சல் கர்ப்பமாக இருக்கும் போது புரோஜெஸ்டிரோன் அளவு அதிகரிக்கும். இப்படி புரோஜெஸ்டிரோன் அதிகரித்தால், உணவுகள் செரிமானமாவதில் தாமதம் ஏற்பட்டு, அதனால் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றில் வலியுடன் கூடிய எரிச்சலை சந்திக்க நேரிடும்.

சருமத்தில் மாற்றம் திடீரென்று சருமம் வறட்சியடைந்தாலோ அல்லது ஆங்காங்கு கருமை படலங்கள் காணப்பட்டாலோ, அதுவும் கர்ப்பத்தின் ஓர் அடையாளமே. இதற்கு கர்ப்ப காலத்தில் மெலனின் அளவு அதிகமாக இருப்பது மற்றும் ஹார்மோன்கள் திடீரென்று அதிகரிப்பதே காரணம்.

சளி மற்றும் ஜலதோஷம் இந்த நிலை ஏற்படுவதற்கு அதிகப்படியான இரத்த ஓட்டம் சளிச்சவ்வு படலத்தை வீக்கமடையச் செய்வதோடு, வறட்சியடையச் செய்யும். இதன் காரணமாக மூக்கு ஒழுகலை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழந்து இருப்பதால், சளி, ஜலதோஷம் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

குரல்களில் மாற்றம் கர்ப்பமாக இருக்கும் போது, புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி அதிகம் இருப்பதால், அவ்வப்போது குரல்களில் மாற்றம் ஏற்படும். எனவே உங்கள் குரலில் திடீரென்று ஏதேனும் மாற்றம் தெரிந்தால், மருத்துவரிடம் பரிசோதித்துப் பாருங்கள்.

தௌதௌ மார்பங்கள் மற்றும் கருமையான மார்பக காம்புகள் கர்ப்பமாக இருந்தால் தென்படும் அறிகுறிகளில் மற்றொன்று மார்பகங்கள் தௌதௌவென்று இருப்பதோடு, மார்பக காம்புகள் கருமையாக இருக்கும். இந்நிலை ஏற்படுவதற்கு காரணமும் ஹார்மோன்கள் தான்.

அதிகப்படியான வியர்வை கர்ப்பமாக இருந்தால், உடலில் இரத்தம் ஓட்டம் அதிகமாக இருப்பதோடு, மெட்டபாலிசமும் அதிகம் இருப்பதால், அதனை குளிர்விக்கும் வண்ணம் அதிகமாக வியர்வை வெளியேறும். எனவே உங்களுக்கு திடீரென்று காரணமின்றி அளவுக்கு அதிகமாக வியர்வை வெளிவந்தால், கர்ப்பமாக உள்ளீர்கள் என்று அர்த்தம்.

படபடப்பு அல்லது வேகமான இதய துடிப்பு இந்நிலை ஏற்படுவதற்கு உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதாகும். குறிப்பாக இந்த நிலை முதல் மூன்று மாத காலத்தில் கர்ப்பிணிகள் சந்திப்பார்கள். அதுவும் ஒரு நிமிடத்திற்கு 10 துடிப்புகள் என வேகமாக இதயம் துடிக்கும்.

குறட்டை இதுவரை நீங்கள் குறட்டை விடாமல் இருந்து, திடீரென்று குறட்டை விட்டீர்களானால், உங்கள் சளிச்சவ்வு வீக்கமடைந்துள்ளது என்று அர்த்தம். இதற்கு உடலில் புரோஜெஸ்டிரோன் அளவு அதிகமாக உள்ளது தான் காரணம்.

19 1439977204 1 stomach

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button