28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
அழகு குறிப்புகள்

அழகா… ஆரோக்கியமா

 

tamil beauty woman

எதில் சம உரிமை வெளிப்படுகிறதோ, இல்லையோ ஆண், பெண் இருபாலரும் அழகு நிலையங்களுக்கு செல்வதில் தெரிகிறது சம உரிமை. நம் முன்னோர் உடல் நலத்துக்கும், அழகுக்கும், சுகத்துக்கும் கற்றுத் தந்துள்ள ஆயிரமாயிரம் வழிகளை விட்டு விட்டு, இப்படி, ‘பார்லர்’ நோக்கி படையெடுக்கிறோம்.

சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பில், இரவு 8:00 மணி வரை மணப் பெண் மேடைக்கு வரவில்லை. காரணம், 4:00 மணியிலிருந்து, ‘மேக்-அப்’ நடந்து கொண்டிருந்ததாம். இந்த சம்பவமாவது, திருமணம் என்பதால் ஒத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம், ‘பார்லர்’ போவதற்கு காரணங்கள் தேவைப்படுவதில்லை. தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்கள், வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விழாக்கள் என்று, பெண்களுக்கு ஆயிரம் வழிகள், வாய்ப்புகள்.
கல்லுாரி மாணவர்கள் சிலரை கேட்டபோது, தங்கள் தலையில், ‘கலரிங்’ செய்திருப்பதாகவும், 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றும் சொல்கின்றனர். எண்ணெய் குளியலுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நேரமேயில்லை என்று அலட்டிக் கொள்பவர்கள் கூட, பல மணி நேரங்களை, ‘பார்லரில்’ செலவிடுகின்றனர்.

ஆபத்தை அறிந்தே…
ஒரு டாக்டர் புலம்பியது, இப்போது ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
‘எங்களுக்கு பீஸ் கொடுப்பதையே, ஏதோ தர்மம் மாதிரி, நாங்கள் கொள்ளையடிப்பது போல் பார்க்கும் அதே மக்கள், ஆயிரம், ஆயிரமாக பார்லரில் கொடுத்து விட்டு பெருமையாக திரும்புகின்றனர்’ என்பதே அந்த புலம்பல்.
‘சோப்பு, க்ரீம், டியோடிரன்ட்’ போன்றவை உடலில் உள்ள, வியர்வை துளைகளை அடைத்துக் கொள்ளக்கூடியவை. சிலர், பார்லரில் சிபாரிசு செய்யும், பேஸ் வாஷ், ஷாம்பு, க்ரீம்களை மட்டுமே பயன்படுத்துவதாய் பந்தாவாக கூறுவர். ‘பக்க விளைவுகள் உண்டு என்று தெரிந்தே தான் இதை செய்கிறோம். 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்துக்கணும்.
‘நீங்கள் சிவப்பாக மாறி விடுவீர்கள்’ என்று கூறும், ‘பிளீச்சிங், பேஷியல் க்ரீம்’களில், 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் இருக்கின்றன என்பது, ஆய்வுகள் தெரிவித்த உண்மை.

பாகுபாடின்றி… tamil samayal.net
‘இயற்கையாகவே மூலிகையால் ஆனது, பக்க விளைவுகள் இல்லை’ என்று விளம்பரப்படுத்தும் அழகு சாதன க்ரீம், லோஷன்களை, ‘பார்லரில்’ கைகளில் உறை போட்டுக் கொண்டு தான் தடவுவர். இது ஏன் என, நாம் யோசிப்பதே இல்லை.
வியாபாரிகளின் விளம்பரங்களும், அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற சுயநலமும், விழிப்புணர்வை அழிக்கும். சிந்தனை தேவையில்லா கல்வியும், நல்லதொரு அறிவியல் வழி வந்த சமூகத்தை அடிமையாக்கி விட்டது என்று, கதற வேண்டும் போல் உள்ளது.
படிக்காத பெண்கள், படித்த பெண்கள் என்ற பாகுபாடே இல்லாமல், அனைவருமே இப்போது சகஜமாக போய் வரும் இடம், ‘பியூட்டி பார்லர்’ தான். tamil samayal.net
பிளஸ் 2 தேர்வில் பெயில் ஆன ஒரு பெண்ணை, அவள் வீட்டில் அனைவரும், ‘ஏதாவது பார்லருக்கு வேலைக்குப் போய் கத்துக்கிட்டு, நீயே ஒரு பார்லர் ஆரம்பிக்கலாமே’ என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றனர். tamil samayal.net
‘பார்லர்’ நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. இயற்கையோடு விளையாடுவது போன்ற தொழில் அது. உடல் கூறுகள் பற்றி அறிந்து, ரசாயனத்தைப் பற்றி அறிந்து, அறிவியலைப் பற்றி உணர்ந்த பிறகே இந்தத் தொழிலை துவங்க வேண்டும் என்பது, பலருக்குத் தெரியவில்லை என்பது, வேதனையான விஷயம். tamil samayal.net
‘அதற்கென தனி படிப்பு, பயிற்சி, முகாம், எல்லாமே இருக்கு’ எனச் சொன்னாலும், அவை எவ்வளவு துாரம் நம்பகமானவை என்பது, அவர்களுக்கே வெளிச்சம். முறைப்படி நடத்தப்படும், ‘பார்லர்’களை விரல் விட்டு எண்ணி விடலாம். பிரபல எழுத்தாளர் ஒருவரின் சிவப்பு முகம், ‘பார்லர்’ செய்த குளறுபடியால், கறுத்துப் போனது, நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. tamil samayal.net
கர்ப்பிணிப் பெண்கள் புருவ முடி திருத்தக் கூடாது. மாதாந்திர தொந்தரவுகள் இருக்கும் நாட்களில், சில சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது போன்ற அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். tamil samayal.net

அடிப்படை விஷயம் tamil samayal.net
எந்த கிரீம் வாங்கினாலும், அது எதனால் தயாரிக்கப்பட்டது போன்ற அடிப்படையான விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இது நம் கடமை. நிறை, குறைகளுக்கு நிவாரணம், நம் வீட்டிலேயே நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதை முழுமையாக தெரிந்து கொள்வோம். நம் பாட்டி, அம்மா எல்லாம் பார்லர் போகாமலேயே அழகாய், அம்சமாய் இல்லையா?! tamil samayal.net
நம் வறட்டு வீண் பந்தாவையெல்லாம் துாக்கி போட்டு விட்டு, இயற்கையான சிகிச்சைகளுக்கு, உணவு முறைக்கு, அழகு குறிப்புகளுக்கு மாறுவோம். கண்டிப்பாக, நமக்கு அழகைவிட, ஆரோக்கியம் முக்கியம் என்பது தெரியும் தானே!

பருக்களுக்கான லேசர் சிகிச்சைக்கு பதில் tamil samayal.net
* மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு கலந்து, பருக்கள் மீது தடவி, 15 நிமிடத்திற்கு பின், கழுவி விடலாம். tamil samayal.net
* முல்தானிமட்டியில் பன்னீர் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் கழுவ, பருக்கள் மட்டுமல்ல; அழுக்கும் போயே போய் விடும். tamil samayal.net

பிளீச்சிங் செய்வதற்கு பதில் tamil samayal.net
கொஞ்சம் சர்க்கரை, சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய், சில சொட்டுகள் தேன் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து சிறிது நேரத்திற்கு கழுவி விடலாம். tamil samayal.net

பேஷியல் செய்து கொள்வதற்கு பதில் tamil samayal.net
கடலை மாவு, மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு, பாலாடை முதலியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவினால், முகம், ‘பளீச்’ என்றாகி விடும்.

பொடுகு நீங்க லோஷன் போட்டு ஊற வைத்து சிகிச்சை செய்வதற்கு பதில்
* வெந்தயம் ஊற வைத்து அரைத்து தலையில், ‘பேக்’ போட்டு அலசி விடலாம்.
* தயிருடன் வெள்ளை மிளகு துாள் கலந்து முடிக் கால்களில் படும்படி ‘மசாஜ்’ செய்து அலசி விடலாம்.

Related posts

நெற்றியில் கொப்புளங்கள் வந்த இடங்களில் இதனை மட்டும் செய்யுங்கள் போதும்!

nathan

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.

nathan

முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட இவற்றை செய்யுங்கள்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகைப் பராமரிக்க 15 எளிமையான டிப்ஸ்!!

nathan

சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மா….

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

ஹீரோயின் மாதிரி அழகான பொலிவான சருமத்தை பெற…

nathan

கூந்தலுக்கு போஷாக்கை கொடுத்து அரிப்புடன் கூடிய பொடுகை நீக்க எளிய இயற்கை வழி முறைகள்!…

sangika

டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும்

nathan