தலைமுடி சிகிச்சை

இள நரையை மறையச் செய்யனுமா? இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!!

பொதுவாக இள நரை இரும்பு சத்து குறைப்பாட்டினாலும், சரியான ஊட்ட சத்து சாப்பிடவில்லையென்றாலும் வரும்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உபயோகிக்கும் ஷாம்பு, ரசாயனம் மிகுந்த கலரிங்க் மற்றும் நீர் ஆகிய்வற்றாலும் இளநரை வருகிறது.
இள நரைக்கு தீர்வு டை அல்ல. வந்த முடிகளை மறைப்பதற்காக டை அடித்து இனி வரும் முடிகளையும் வெள்ளையாக்குகிறீர்கள்.

இளநரையை பிடுங்கவோ டை அடிக்கவோ வேண்டாம். மாறாக சரியான உணவு சாப்பிட்டு தலைக்கு இயற்கையான மூலிகை எண்ணெய் உபயோகித்தால் இள நரை மறைந்து பழையபடி கூந்தல் கருமையாகும். அவ்வாறு எப்படி உங்கள் இள நரையை மறையச் செய்யலாம் என பார்க்கலாம்.

கருவேப்பிலை : ஒருபிடி கருவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். நன்றாக கொதித்ததும் நீரை ஆற விட்டு வடிகட்டிக் கொள்ளவேண்டும். தலைக்கு குளித்தபின் இந்த நீரால் இறுதியாக தலை முடியை அலசவும். விருப்பமிருந்தால் கொதிக்க வைத்த கருவேப்பிலையை அரைத்து தலையில் போட்டுக் கொள்ளலாம். அதன் பின் வடிகட்டிய நீரால் அலசலாம்.

தேநீர் : தேநீரை காய்ச்சிக் கொண்டு தலைக்கு குளிக்கும்போதெல்லாம் இறுதியாக இந்த தேநீரைக் கொண்டு அலசினால் தலைமுடி கருமையாக மாறும்.

விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் : விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சம அளவு கலந்து லேசாக சூடு படுத்தி வாரம் ஒரு நாள் தலையில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். நரை முடி காணாமல் போய் கருமையான அடர்த்தியான முடி கிடைக்கும்.

மருதாணி : கடைகளில் விற்கும் ஹென்னா பவுடரில் ரசாயனம் கலந்திருப்பார்கள். அதற்கு பதிலாக மருதாணி இலையை பறித்து காய வைத்து எண்ணெயில் காய்ச்சி தினமும் 1 ஸ்பூன் உபயோகித்து பாருங்கள். கூந்தல் கருமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடுங்கள் பின்னர் ஆறிய பின் வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்தால் நரை முடி மறைந்துவிடும்.

greyhair 24 1477303795

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button