சைவம்

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்
தேவையான பொருட்கள் :

பிஞ்சு வெண்டைக்காய் – 20,
கரம்மசாலா தூள் – கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,
அரிசி மாவு – 1 டீஸ்பூன்,
சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) – கால் டீஸ்பூன்,
கடலை மாவு – 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

* நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.201702151535259280 ladies finger chips vendakkai chips SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button