உடல் பயிற்சி

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் 7 யோகாசனங்கள்!

உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர்டென்ஷன் என்று அழைப்பார்கள். இன்றைய நவநாகரீக காலத்தில் அமைதியான முறையில் நம்மை கொலை செய்து கொண்டிருக்கிறது இந்த இரத்த அழுத்தம் தான். இந்த இரத்த அழுத்தம் ஒருவருக்கு அதிகமாக இருந்தால், அதனால் இதய நோய் விரைவில் தாக்கக்கூடும்.

அதனால் உங்களுக்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருந்தால், அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர சரியான உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்றி வருவதோடு, கீழ்கூறிய சில யோகா பயிற்சிகளையும் கடைப்பிடியுங்கள்!

பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana) நீங்கள் இரத்த கொதிப்பால் அவதிப்பட்டு வந்தால், உங்களின் இதய தமனிகள் சுருங்கும். இதனால் மாரடைப்பு மற்றும் வாதம் ஏற்படும்.ஆனால் பஸ்சிமோத்தாசனம் போன்ற முன்பக்கமாக குனிந்து செய்யும் ஆசனங்கள் உங்கள் தமனிகளை இளகுவாக்கும். இதனால் இயற்கையான முறையில் இரத்த அழுத்தம் குறையும்.
13 1436761291 2 shavasana
சாவாசனம் (Savasana) சாவாசனம் அல்லது சவ தோரணை போன்ற அமைதி பெறும் தோரணைகள் இரத்த கொதிப்பை குறைக்க மிகவும் உதவும். இது தசை இறுக்கத்தை நீக்கி, அழுத்தத்தை போக்கும்.
13 1436761297 3 yogadepression
பாலாசனம் (Balasana) இரத்த அழுத்தம் ஏற்படுவதால் பதற்றமும் கோபமும் உண்டாகும். பாலாசனம் அல்லது குழந்தையின் தோரணை பதற்றத்தை உருவாக்கும் தேவையற்ற அமைதியின்மையைப் போக்கி மனதை அமைதியாக்கும். இது உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் வெளியேற்ற உதவும். இதனால் மன அழுத்தம் நீங்கும்.
13 1436761302 4 anulom vilom
பிராணயாமம் (Pranayama) பிராணயாமம் முறையிலான யோகாவால், உங்கள் மனது பெரிதளவில் அமைதி பெறும். அனுலோம் விலோம் பிராணயாமம், உங்கள் பதற்றத்தை குறைத்து, இதய துடிப்பை குறைக்கும். இதனால் இரத்த கொதிப்பு குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எண்டோக்ரைன் அமைப்புகள் சமநிலை அடையும்.
13 1436761307 5 dog pose
அதோ முக சவனாசனம் (Adho Mukha Svanasana) அதோ முக சவனாசனம் அல்லது கீழ்புறமாக பார்க்கும் நாயின் தோரணை, உங்கள் தோள்பட்டைகள் மற்றும் முதுகு முழுவதும் ஏற்படும் டென்ஷன் மற்றும் அழுத்தத்தை போக்கும்.
13 1436761315 6 bridgepose
சேதுபந்தாசனம் (Setubandhasana) சேதுபந்தாசனம் அல்லது பாலம் தோரணை உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, விழிப்புணர்வை ஊக்கப்படுத்தி, அழுத்தம் மற்றும் டென்ஷனை குறைக்கும்.
13 1436761324 7 yogasukha
சுகாசனம் (Sukhasana) சுகாசனம் போன்ற உட்காரும் தோரணைகள் உங்கள் இதயத்தின் மீது அதிக சிரமத்தை ஏற்படுத்தாததால், அதிக இரத்த அழுத்தத்திற்கு இது மிகச்சிறந்த சிகிச்சையாக அமையும். உங்கள் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தவும் சாந்தப்படுத்தவும் இது மிகச்சிறந்த ஆசனமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button