மருத்துவ குறிப்பு

ஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி?

வைர ஆபரணங்களின் மீதான மக்களின் ஆர்வம் இப்போது பெருகி வருகிறது. இந்நிலையில், தரம் குறைவான மற்றும் போலி வைர நகைகளின் புழக்கமும் அதிகரித்து வருவது குறிப்பிடப்பட வேண்டியது.

நவரத்தினங்களில் ஒன்றான வைரம் படிக நிலையில் உள்ள, கார்பன் மூலக்கூறுகளால் ஆன கடின மான பொருள். பூமிக்குக் கீழே 140-190 கிலோமீட்டர் ஆழத்தில், 1050-1750 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் புதைந்திருக்கும்போது கார்பன் மூலக்கூறுகள் வைரமாக மாறுகின்றன.

எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தின் கோல்கொண்டாவில்தான் முதன்முதலாக வைரம் கிடைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே வைரம் பெருமளவில் கிடைக்கிறது.

வைரம் வாங்கும் முன்..!

வைரத்தின் தரத்தைப் பரிசோதித்து அளிக்கப்படும் GIA, AGS தரச்சான்றிதழ்கள் பெற்றவற்றையே வாங்கவும்.

உலகம் முழுக்க நான்கு விஷயங்களைப் (4C) பொறுத்தே வைரத்தின் மதிப்பு மற்றும் தரம் தீர்மானிக்கப்படும். அவை…

1. Cut – வெட்டுத் தரம்… வைரத்தின் வெட்டுத் தோற்றத்தைப் பொறுத்து, அது பிரதிபலிக்கும் ஒளியின் அளவும், அதன் மதிப்பும் அதிகரிக்கும். சிறப்பான வெட்டுடைய வைரத்தில் கண்ணுக்குத் தெரியாத கரும்புள்ளிகள் குறைவாக இருக்கும் என்பதால், அதன் விலையும் நிறமும் அதிகம்.

2. Color – நிறம்… வைரம் இயற்கையில் மஞ்சள் முதல் பச்சை நிறம் வரை பல்வேறு நிறங்களில் கிடைக்கப் பெற்றாலும், நிறமற்றவை எனக் கூறப்படும் வெள்ளை நிற வைரமே அதிக மதிப்புடையது.

3. Clarity – தெளிவு… பெரும்பாலான வைரங்களில் அதன் தரத்தைக் குறைக்கும் காரணிகளான வடுக்கள் மற்றும் வெட்டுக்கள் இருக்கும். எனவே, அவை இல்லாத வைரங்கள் மிகுந்த மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குறைபாட்டை பிரத்யேகக் கண்ணாடி கொண்டுதான் காண இயலும்.

4. Carat – காரட்… பல ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வைரத்தின் எடையை கணக்கிட, ஒரே எடையைக் கொண்ட விதையான காரப் விதை (Carob Seeds) பயன்படுத்தப்பட்டது. ஒரு விதையின் எடை 200 மில்லிகிராம் என்பதால், அதை ஒரு காரட் என்று அழைத்தனர். இதுவே வைரத்தின் எடையைக் கணக்கிடும் அளவீடாக அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.p35a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button