29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201702171306232239 Bitter gourd dal soup SECVPF
ஆரோக்கிய உணவு

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

ஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப் குடிக்கலாம். இப்போது இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்
தேவையான பொருட்கள் :

பிஞ்சு பாகற்காய் – 200 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
இலவங்க இலை – 2
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 1
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – அரை லிட்டர்
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

செய்முறை :

* கொத்தமல்லி, பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வேகவைத்து நீரில் கரைத்து கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் கீறிகொள்ளவும்.

* பாகற்காயை வேகவைத்து கொள்ளவும்.

* வாணலியில் நெய் ஊற்றி சீரகம், இலவங்க இலையை சேர்த்து தாளித்த பின் பாகற்காயை போட்டு சிறிது வதக்கிய பின்னர், மிளகுதூள், இஞ்சி விழுது, ப.மிளகாய் இட்டு நன்கு வதக்கி கரைத்து வைத்துள்ள பருப்பு கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இதை பருகினால் ஜீரண கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். கல்லீரல் நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவு.201702171306232239 Bitter gourd dal soup SECVPF

Related posts

அவசியம் படிக்க..காலை நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

nathan

பாதம் பருப்பை விட இந்த பருப்பிற்கு இப்படி ஒரு சக்தியா..?

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

காளான்களை அதிகம் சாப்பிடுவது அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது…

nathan

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

தங்கமான விட்டமின்

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்…!!

nathan

இரும்புச்சத்து நிறைந்த வல்லாரை!

nathan