சைவம்

சென்னா பன்னீர் கிரேவி

சென்னா பன்னீர் கிரேவி
சென்னா பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள்:

சென்னா – ஒரு கப்
பனீர் – 3/4 கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
இஞ்சி – சிறு துண்டு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
பிரியாணி இலை – ஒன்று
சீரகம் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
வெண்ணெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை:

சென்னாவை வேக வைத்து எடுக்கவும். பன்னீரை சிறிது வெண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் விட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

இத்துடன் வேக வைத்த சென்னா, சென்னா வேக வைத்த நீர் தேவையான அலவு ஊற்றி மசாலா வாசனை போகம் வரை கொதிக்க விடவும். இத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக எடுத்து பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். சுவையான சென்னா பன்னீர் கிரேவி தயார்1476355195 2173.jpg

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button