உடல் பயிற்சி

குதிகால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி

தற்போதுள்ள காலகட்டத்தில் கால்வலி, குதிகால் வலியால் பலர் அவதிப்படுகின்றனர். குதிகால் வலியால் அவதிப்படுபவர்களுக்கான எளிய உடற்பயிற்சியை கீழே பார்க்கலாம்.

குதிகால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி
இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் 3 அடி அகலம் விட்டு நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை படத்தில் உள்ளபடி பிடித்து கொண்டு கால்களின் முன்பாதம் மட்டும் தரையில் படும்படி நிற்கவும்.

பின்னர் முட்டிவரை கால்களை மடக்கி (சேரில் உட்காருவதை போல் ) உட்காரும் நிலையில் இருக்கவும். ஆனால் முன்கால் பாதங்கள் மட்டுமே தரையில் பட வேண்டும்.

இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 20 முதல் 30 முறை செய்ய வேண்டும். தினமும் இருவேளை இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கால்வலி படிப்படியாக சரியாகும்.
Simple exercise can alleviate heel pain SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button