தலைமுடி சிகிச்சை

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு பல்வேறு உடல்நலம் மற்றும் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும். குறிப்பாக முகப்பரு பிரச்சனை முதல் தலைமுடி பிரச்சனை வரை பலவற்றையும் நொடியில் சரிசெய்யும்.

இதற்கு பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் தான் முக்கிய காரணம். மேலும் பூண்டில் அல்லிசின் மற்றும் செலினியமும் நிறைந்துள்ளதால், பல பிரச்சனைகளும் விரைவில் குணமாகிறது. இங்கு பூண்டு கொண்டு எந்த மாதிரியான அழகு பிரச்சனைகளுக்கு எல்லாம் விரைவில் தீர்வு காண முடியும் என காணலாம்.

விரிவடைந்த சருமத்துளைகள் சுருங்கும்
முகத்தில் சிலருக்கு மேடு பள்ளங்களாக இருக்கும். இப்படி சருமத்துளைகள் விரிவடைந்தவாறு இருந்தால், அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் தேங்கி அடைத்துக் கொள்ளும். இப்படி விரிந்த சருமத்துளைகளை சுருங்கச் செய்வதற்கு பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும்.
அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தக்காளி பேஸ்ட்டுடன், 1 பூண்டு பல்லை மென்மையாகத் தட்டிப் போட்டு, ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

சீழ் நிறைந்த பிம்பிள் உதிரும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் 1 டீஸ்பூன் பூண்டு சாறு சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி பிம்பிள் மீது தினமும் பலமுறை தடவி, உலர வைத்து கழுவி வர, பிம்பிள் உதிர்ந்து, முகம் பொலிவோடு இருக்கும்.

முகப்பரு 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், சில துளிகள் பூண்டு சாறு சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவி, துணியால் மென்மையாக துடைக்க வேண்டும்.

படர்தாமரை
1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாறு அல்லது பூண்டு எண்ணெயை 10 நொடிகள் சூடேற்றி இறக்கி, குளிர வைத்து, காட்டன் பயன்படுத்தி படர்தாமரையின் மீது, தினமும் 2 முறை தடவ வேண்டும்.

சரும சுருக்கங்கள்
பூண்டுகளில் சல்பர் அதிகம் உள்ளது. இது சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரித்து, சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளைத் தடுக்கும். அதற்கு 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன், 5 துளிகள் பாதாம் எண்ணெய், 1/2 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தலைமுடி வளர
பூண்டுகளில் உள்ள அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே பூண்டு சாறு அல்லது வெதுவெதுப்பான பூண்டு எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வளர்வதை நீங்ளே காண்பீர்கள்.

குறிப்பு பூண்டு அனைவருக்குமே நல்ல பலனைத் தராது. முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினர் பூண்டு கொண்டு சருமத்தைப் பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதனால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே பூண்டு பயன்படுத்தும் முன், அதன் சாற்றினை கையில் சிறிது விட்டு தேய்த்து ஊற வைத்துப் பாருங்கள். அப்போது அரிப்பு ஏதேனும் ஏற்பட்டால், உடனே அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

garlic oil 04 1478234790

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button