அட்டகாசமான பொலிவை தரும் ரோஸ் வாட்டர் எப்படி வீட்டில் தயாரிக்கலாம்? எளிய முறை!!

ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. ஈரப்பதம் அளிக்கும். சுருக்கங்களை போக்கும். கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். உதட்டிற்கு நிறம் தரும். இமை, புருவம் அடர்த்தியாக வளரச் செய்யும்.

ரோஸ் வாட்டரை கடைகளில் வாங்கும்போது அது தரமானதா இல்லை கலப்படமானதா என சந்தேகத்துடனே உபயோகிக்க வேண்டாம். நீங்களே வீட்டில் சில நிமிடங்களில் செய்து கொள்ளலாம்.

இவை சந்தேகமில்லாமல் உங்கள் சருமத்திற்கு அட்டகாசமான பொலிவை தரும். உபயோகித்து பாருங்கள். எப்படி வீட்டில் தயாரிக்கலாம் எந்தை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை- 1 : ஒரு கப் ரோஜா இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள். உரமில்லாதபடி ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து நன்றாக அழுக்கு, தூசி போக கழுவிக் கொள்ளுங்கள். ஃப்ரஷான இதழ்களை அல்லது காய வைத்து உலர்ந்த இதழ்களையும் உபயோகிக்கலாம்.

செய்முறை- 2 : ஒன்றரை கப் அளவுள்ள சுத்தமான நீரை எடுத்து கொதிக்க வைக்க வேண்டும்.

செய்முறை- 3 : அதில் உலர்ந்த ரோஜா இதழ்களை போடவும். . சுமார் 20 நிமிடம் வரை குறைவான தீயில் கொதிக்க வையுங்கள். ரோஜா இதழ்களின் நிறம் முழுவதும் நீரில் கலக்கும் வரை கொதிக்க வக்கவும்.

செய்முறை-4 : பின்னர் அடுப்பை அணைத்து இந்த நீரை ஆற விடுங்கள். முழுவதும் ஆறிய பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்

செய்முறை-5 : ஒரு பாட்டிலில் சேகரித்து சில நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இதனால் நீரில் ரோஜாவின் குணங்கள் இறுகி பிடிக்கும். பின்னர் அதனை உபயோகிக்கலாம்.

Leave a Reply