அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்

95b22177-017d-4235-9e80-13c529b9d24e_S_secvpfநாள் முழுவதும் கடுமையான ரசாயனங்களை கையாளுவது, புற ஊதா கதிர்களில் தொடர்ச்சியாக வெளிப்படுவது, தூசி நிறைந்த சூழலில் அல்லது மண்ணில் விளையாடுவது, மாசு படிந்த சூழலில் வெளிப்படுவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தாமல் வைத்திருத்தல் போன்ற பல காரணங்களால் உங்கள் கைகளின் தோல் பதனிடுதலாகும். இதனால் உங்கள் கைகளின் அசல் நிறம் மாறுபட்டு அழகும் பாதிக்கப்படும். நமக்கு எழும் கேள்வியெல்லாம், இந்த தோல் பதனிடுதலை முழுமையாக நீக்க முடியுமா என்பது தான்? பெண்களே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. பல வகை காரணங்களால் ஒருவரின் சருமம் சுலபமாக பதனிடுதல் ஆகிறது என்றால், கீழ்கூறிய சில எளிய டிப்ஸ்களை பின்பற்றி அவைகளை நீக்கவும் செய்யலாம்.
கடலை மாவு

images (11)

கடலை மாவு, தயிர் மற்றும் ர்லுமிச்சையை கொண்டு ஒரு பேஸ்ட்டை தயார் செய்யுங்கள். மூன்றின் அளவும் சரிசமமாக இருக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். பின் அதனை 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். இந்த கலவை காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.

மஞ்சள்

8

1 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை பாலில் கலந்து கொள்ளுங்கள். அதனை நன்றாக கலக்கி கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். தடவிய கலவை காயும் வரை, 10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இளநிர்

images (12)

 

கைகளில் இளநீரை தொடர்ச்சியாக தடவி, பின் காய வையுங்கள். வேகமான மற்றும் சிறந்த பலனை பெறுவதற்கு, இந்த சொல்யூஷனை தினமும் ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்தலாம்.

பப்பாளி

download (5)

 

சரும பதனிடுதலை நீக்க உதவும் மற்றொரு பொருள் பப்பாளி. பப்பாளியை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து, அதை அப்படியே 10 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
முல்தானி

ld86

 

மட்டி வெண் பூசணி மற்றும் முல்தானி மட்டி கொண்ட கலவையை தயார் செய்து, அதனை பாத்க்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். பின் குளிர்ந்த நீரில் கையை அலசுங்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button