30.8 C
Chennai
Sunday, May 11, 2025
201702241359520872 top 5 lies men tell women SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்

ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க ஆண்கள் அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது போல் நடிப்பது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது.

பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்
காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. ஆனால் காதல் உறவுகளில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை மட்டுமே நாம் பார்க்கப்போகிறோம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். காதலிப்பதற்கு முன்பு உங்கள் ஆண் காதல் குண்டை பயன்படுத்துகிறாரா என்பதை எப்படி கண்டுப்பிடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

ஒரு பெண்ணை தன் இழுப்பிற்கு ஒரு ஆண் வளைக்க நினைத்தால், அவன் கூறும் முதல் பொய் இதுவாக தான் இருக்கும். தன் அழகை பற்றி ஒரு ஆண் இப்படி புகழும் போது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு ஆனந்தமாக தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாம் மயங்கி விடாதீர்கள்! சிறிது பொறுத்திருந்து பார்க்கவும்.

ஒரு ஆண் உங்கள் மீது பைத்தியமாக இருப்பதையும், உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதையும் நீங்கள் அறிந்தால், உங்கள் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அலசுவது கண்டிப்பாக கஷ்டமான ஒன்றே. தங்களின் இறுதியான இன்பத்தை பெறும் வரை, ஆண்கள் பெண்களின் மனதை மேக மூட்டத்துடன் வைத்திடவே விரும்புவார்கள். அதனால் அனைத்து வழிகளிலும் அவர் காதலை சோதித்துப் பாருங்கள் பெண்களே!

நீங்கள் ஒரு புத்திசாலியான பெண்ணாக இருந்தால், நீ இல்லாத வாழ்க்கையை வாழ்வதே வீண் என்று கூறும் ஆணின் இந்த பொய்யை கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் இந்த பொய்யால் நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்றால், காதலின் மீது மிக ஆழமான ஏக்கத்தை நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதேப்போல் இதுவரை பார்த்திருந்த சில உணர்ச்சிரீதியான தேவைகளையும் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதையே அது உணர்த்தும். காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் மற்றொரு பொய் இது என்பது புரிந்து கொள்ளுங்கள் பெண்களே! இந்த சுயநலமான உலகில், யாரும் யாருக்காகவும் சாவதில்லை. அதனால் அவரிடம் பார்த்து மெதுவாக அணுகவும்.

இது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும்; ஆனால் உங்கள் மீதுள்ள காதலால் ஒருவர் உங்களுக்காக சாக கூட தயாராக உள்ளார் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று தான் அர்த்தமாகும். நீங்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும். முதலில் காதல் குண்டை பயன்படுத்தும் அவரின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வலை! அவரை நீங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால், மீண்டும் ஒரு முறை யோசித்து பாருங்கள். காதல் குண்டை பயன்படுத்தியதால் உருவான உறவுகள், கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து விடும்.

உண்மையான காதல் உணர்வுகளுக்கும், காதல் குண்டை பயன்படுத்துவதற்கும் உள்ள பெரிய வித்தியாசமே தீவிரம் தான். பொதுவாக காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் முதல் சில நாட்களில் நடக்கும் சந்திப்புகளிலேயே மிகைப்படுத்திய காதலை வெளிப்படுத்துவார்கள். உண்மையான காதல் என்றால் மெதுவாகவும், அழகாகவும் நடைபெறும். இதுவே காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் என்றால், உங்களை ஈர்க்க மிக வேகமாக, கஷ்டப்பட்டு முயற்சி செய்வார்கள். உங்களிடம் இருந்து அவர் ஏதோ ஒன்றை மிக வேகமாக எதிர்ப்பார்க்கிறார் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்.

ஒரு ஆண் உங்களை தொடர்ச்சியாக தொலைப்பேசியில் அழைத்து, மெசேஜ்கள் அனுப்பி, மின்னஞ்சல்கள் அனுப்பி வந்தால், உங்களின் கவனம் அவருக்கு உடனடியாக தேவை என்பதை இது குறிக்கும். காதல் குண்டை பயன்படுத்துபவரின் வலையில் விழுவதை விட உண்மையான காதலுக்காக காத்திருப்பதே மேலாகும். காதல் குண்டை பயன்படுத்தி, பொய் பேசும் ஆண்களிடம் இருந்து உஷாராக இருங்கள் பெண்களே!201702241359520872 top 5 lies men tell women SECVPF

Related posts

ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும்

nathan

இந்த காரணத்துனால கூட நீங்க கர்ப்பம் ஆகமா இருக்கலாமாம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சிறகுகள் தந்த இனிய கணவர்களுக்கு மனைவிகளின் பிரிய நன்றிகள்!

nathan

கல்லீரல் நோய்

nathan

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்

nathan

ஆரோக்கியத்தில் ஆண்களை விட பெண்களே வலிமையானவர்கள்

nathan

உடலில் இரத்த வெள்ளையணுக்கள் அளவுக்கு அதிகமானால் என்ன ஆகும் என்று தெரியுமா?

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் வழிமுறைகள்

nathan

பாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

nathan