எடை குறைய

கொழுப்பு குறைய இதைக் குடிங்க

முறையற்ற தூக்கம் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கொழுப்பு குறைய இதைக் குடிங்க
இன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நல்ல தூக்கம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். நல்ல தூக்கம் என்பது குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி வரை இருக்க வேண்டும். அப்படித் தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் பால் குடித்துவிட்டுச் செல்வதுண்டு. நல்ல தூக்கத்தைத் தரக்கூடிய மேலும் சில பானங்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

தூங்குவதற்கு முன் பால் குடித்துவிட்டுச் செல்வது நல்ல தூக்கத்தைத் தரும். உடலுக்குத் தேவையான கால்சியமும் கிடைக்கும். நல்ல தூக்கம் இருந்தால் அடுத்த நாள் நாம் உண்ணும் உணவின் அளவு தானாகவே குறைந்துவிடும்.

தினமும் தூங்கச் செல்லும் முன் ஒரு சிறிய கிளாஸ் அளவுக்கு கிரேப் ஜூஸ் குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளையும் எரித்துவிடும். கெட்ட கொழுப்புகளை உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பாகவும் மாற்றிக் கொள்ளும்.

டீ குடித்தால் தூக்கம் கலைந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் உடலில் குளுக்கோஸின் அளவு கட்டுப்படுத்தப்படும். அது தூக்கத்தைத் தூண்டும். மேலும் உடலில் உள்ள கிளைசின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

சோயா மில்க் பவுடரில் அமினோ ஆசிட் அதிக அளவு இருக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன் குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன.201702271455010655 This drink this fat reduce SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button