மருத்துவ குறிப்பு

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால், மன அழுத்தம் குறையுமாம்! – ஆய்வில் தகவல்

எங்கெல்லாம் மனிதர்கள் பறவைகளுடன் அதிகம் பழகுகிறார்களோ… அதிகம் அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக, ஓர்ஆய்வு முடிவு சொல்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் சார்பாக 270 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பறவைகளுடன் நேரம் செலவிடுபவர்கள், அவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை குறைவாக இருப்பது உறுதியாகியுள்ளது.

பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன, ஏன் மன அழுத்தம் குறைகிறது என்ற முழுக் காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனினும், மனிதர்களின் முகத்திலேயே எப்போதும் விழிக்கும் நகர வாசிகளைவிட, இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களே நிம்மதியாக இருக்கிறார்கள் எனப் பேராசிரியர் டேனியல் காக்ஸ் கூறியிருக்கிறார் . இந்தச் செய்தியைப் படித்தவுடனே பறவைகள் இருக்கக்கூடிய படத்தை டவுண்லோடு செய்து பார்க்காதீர்கள் பாஸ், ஜன்னலைத் திறந்து நிஜப் பறவைகளைப் பாருங்கள், கவனியுங்கள், உணவளியுங்கள்.20123 FlyingBirds 03042

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button